Photo Credit: Star Health
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான Star Health Insurance மீது Cyberattack நடந்துள்ளது. இது சில தரவுகளை சட்டவிரோதமாக அணுகுவதற்கு வழிவகுத்தது என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் முதன்முதலில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் Star Health Insurance நிறுவனம் விசாரணைக்கு முன் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. Star Health Insurance நிறுவனம் முறையான குற்றப் புகாரை பதிவு செய்துள்ளதாகவும், காப்பீடு மற்றும் இணைய பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஹேக்கர்கள் டெலிகிராம் சாட்போட்களைப் பயன்படுத்தி நிறுவனத்தின் தரவை கசியவிட்டதாக ஒரு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
TechCrunch நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இது உண்மையில் ஒரு தரவு மீறல் சம்பவம் என கூறியுள்ளது. சம்பவம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த விவரங்கள் வெளிவந்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்ட Star Health Insurance நிறுவனத்தின் தகவல்களை ஹேக்கர்கள் பெற முடிந்தது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏதேனும் வாடிக்கையாளரின் தகவல் தரவு மீறப்பட்டதா என்பது குறித்த விவரங்களைப் பகிரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் தடயவியல் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், இது இணைய பாதுகாப்பு நிபுணர்களால் வழிநடத்தப்படுவதாகவும் ஸ்டார் ஹெல்த் தெரிவித்துள்ளது. விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறுவனம் அரசு மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. சைபர் செக்யூரிட்டி மற்றும் ஒழுங்குமுறை துறைகள் தொடர்பான அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், ஸ்டார் ஹெல்த் மீதான சைபர் தாக்குதல் நடந்த போது பெரிய அளவில் தரவு மீறல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, 31 மில்லியன் பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தரவுகளும், 5.8 மில்லியனுக்கும் அதிகமான காப்பீட்டுக் கோரிக்கைகளும் திருடப்பட்டுள்ளன. தகவல் அனுப்பும் தளமான டெலிகிராம் வழியாக கசிந்ததாக பின்னர் கூறப்பட்டது.
ஹேக்கர்கள் டேட்டாவை கசியவிடடெலிகிராம் வழியாக சாட்போட்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது . தரவுகளில் பெயர்கள், தொலைபேசி எண்கள், முகவரிகள், வரி விவரங்கள், அடையாள அட்டைகளின் நகல்கள், பரிசோதனை முடிவுகள் மற்றும் மருத்துவ நோயறிதல்கள் போன்ற தகவல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சில நாட்களுக்குப் பிறகு Star Health Insurance நிறுவனம் டெலிகிராமுக்கு எதிராக நிறுவனத்தின் முக்கியமான தரவுகளை கசியவிடுவதற்கு வழிவகுத்ததாகக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளது, இந்தியாவில் தரவுகளை ஆன்லைனில் கிடைக்கச் செய்யும் எந்த சாட்போட்கள் மற்றும் இணையதளங்களைத் தடுக்க வேண்டும் என்று டெலிகிராம் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதலாக, ஸ்டார் ஹெல்த் மென்பொருள் நிறுவனமான கிளவுட்ஃப்ளேருக்கு எதிராக கசிந்த தரவை ஹோஸ்ட் செய்யும் இணையதளங்களுக்கு சேவைகளை வழங்கியதாக புகார் அளித்துள்ளது.
இது ஒரு பெரிய டேட்டா லீக் என்று கூறப்படுகிறது 3.1 கோடி பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறான கைகளில் சிக்கினால் அவர்கள் இலக்காகலாம். இது மக்களுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். மக்களின் அடையாளத் திருட்டுதான் மிகப் பெரிய பிரச்சனை. ஹேக்கர்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்தி நிதி அல்லது பிற மோசடிகளைச் செய்யலாம். இந்த தகவலைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியும் மேற்கொள்ளப்படலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்