இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தேவையான அனுமதிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும், என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21 நாட்கள் ஆரம்ப ஊரடங்கின் போது மொபைல்கள், மடிக்கணினிகள் போன்ற பொருட்கள் ஆன்லைனில் விற்க அனுமதிக்கப்படவில்லை
கொரோனா வைரஸ் காரணமாக, மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 20 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மொபைல் போன்கள், டிவிக்கள், குளிர்சாதன பெட்டிகள், மடிக்கணினிகள் போன்ற மின்னணு பொருட்கள் ஏப்ரல் 20 முதல் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மே 3 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட பிறகு, உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரியிடமிருந்து இந்த விளக்கம் கிடைத்தது.
உள்துறை அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்புகள் குறிப்பாக இ-காமர்ஸ் தளங்களில் உணவு, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுவதாகக் கூறியது.
இப்போது, "இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தேவையான அனுமதிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் போது வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
இத்தகைய இ-காமர்ஸ் தளங்களின் தளவாடங்கள் மற்றும் விநியோக பணிகளில் ஏராளமான மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, துறையைத் இயக்குவதன் மூலம், ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது.
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கும் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளருடன், அனைத்து லாரிகள் மற்றும் பிற பொருட்கள் / கேரியர் வாகனங்களை இயக்கவும் அரசு அனுமதித்துள்ளது.
மேலும், நெடுஞ்சாலைகளில் லாரி பழுதுபார்ப்பு மற்றும் தாபாக்கள் (உணவகங்கள்) கடைகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தூரத்துடன், செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Asus VM670KA AiO All-in-One Desktop PC With 27-Inch Display, Ryzen AI 7 350 Chip Launched in India
A Knight of the Seven Kingdoms OTT Release: Know When and Where to Watch This Prequel of Game of Thrones