பிக் பில்லியன் டே சேல் வரும் 10-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் அறிவிக்கும் 5-வது பிக் பில்லியன் டே என்பதுகுறிப்பிடத்தக்கது
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல சலுகைகளை அறிவித்துள்ளது ப்ளிப்கார்ட்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பிக் பில்லியன் டே சேல் வரும் 10-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் அறிவிக்கும் 5-வது பிக் பில்லியன் டே என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதன்படி மொபைல் போன், டிவி, வீட்டிற்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை அதிரடி ஆஃபரில் விற்பனை செய்யப்படும். இதனை விளம்பரப்படுத்துவதற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களை ப்ளிப்கார்ட் வளைத்துப் போட்டுள்ளது.
இதனை தவிர்த்து எச்.டி.எப்.சி. வங்கி ப்ளிப்கார்ட்டில் பொருள் வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரை சலுகை அளிக்கிறது. டி.வி. மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை ஆஃபர் அளிக்கிறது ப்ளிப்கார்ட். 500-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் சுமார் 38,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு தயாராக உள்ளது. டிஜிட்டல் கேமரா, டேப்லெட்கள், போர்ட்டபிள் ஸ்பீக்கர், ஆப்பிள் ஐ-பேட் உள்ளிட்டவற்கு அதிக ஆஃபர் வழங்கப்படவுள்ளதால் பிக் மில்லியன் டேவை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
James Webb Telescope May Have Spotted First Generation of Stars in the Universe