அமேசான் ப்ரைம் டே விற்பனை இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், சிறந்த சலுகைகளை பெறுவதற்கான சில ஆலோசனைகள்
Photo Credit: Amazon
பல புதிய தயாரிப்புகள் இந்த அமேசான் ப்ரைம் டே சேலில் விற்பனையாகவுள்ளது
ஆமேசான் நிறுவனம் நடத்தும் 'ப்ரைம் டே 2019' சேல், வரும் ஜூலை 15 அன்று நள்ளிரவு துவங்கவுள்ளது. இந்த விற்பனை 48 மணி நேரங்களுக்கு நீடிக்கவுள்ளது. இது சென்ற ஆண்டு நடந்த விற்பனையை விட 12 மணி நேரங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையாக இந்த 'ப்ரைம் டே 2019' சேல் இருக்கும் என அமேசான் நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஏற்கனவே, 10 பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் உள்ளது என ஏற்கனவே அறிவித்திருந்தது. இதேபோல இன்னும் சில அறிவிப்புகளை அமேசான் நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, இந்த சிறந்த சலுகைகளை பெறுவது எப்படி?
ஜூலை 15, நள்ளிரவு 12 மணிக்கு துவங்கவுள்ள இந்த விற்பனை 48 மணி நேரங்கள் நடைபெறவுள்ளது. இந்த விற்பனையில், ஆயிரக்கணக்கான புதிய தயாரிப்புகள், சலுகைகளுடன் லட்சக்கணக்கான பொருட்கள், லைடினிங் டீல்கள் என பலவற்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு ஒரு டீஸரையும் வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். சரி, இந்த விற்பனையில் சிறந்த சலுகைகளை எப்படி தேடிப்பெறுவது?
1. முன்னதாகவே எந்த பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும் என தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பொருட்களை அமேசானின் விஷ்லிஸ்ட்டில் (Wish List) சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. அமேசான் ப்ரைம் டே விற்பனையில், பொருட்களை அனைத்தும் விரைவில் விற்றுத்தீர்க்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அதனால், முந்திக்கொள்வது நல்லது. இந்த விற்பனை நள்ளிரவு 12 மணிக்கே துவங்குகிறது. அப்போது, பொருட்களை வாங்கத் துவங்குவது சிறந்தது.
3. பொருட்களை வாங்குவதற்கு முன் விலையை ஒப்பிட்டு பாருங்கள். மற்ற விற்பனை தளங்களில், அந்த பொருளின் விலை எவ்வளவு இருக்கிறது என்பதை பாருங்கள். அவற்றுடன், ஒப்பிடுகையில் அமேசான் தளத்தில் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில், பொருளை பெறுவது சிறந்தது.
4. இந்த விற்பனையில், பல சலுகைகளை அமேசான் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த சலுகைகளை தேடி சரியாக பயன்படுத்தினால், இந்த விற்பனை நமக்கு சிறந்து விற்பனையாக அமையும். கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச், பணம் செலுத்தும் முறை என பல சலுகைகளை அமேசான் நிறுவனம் அளிக்கவுள்ளது. அவற்றை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த 'ப்ரைம் டே' விற்பனையில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். அதனால், நீங்கள் ப்ரைம் வாடிக்கையாளராக இல்லை என்றால், முதலில் ப்ரைம் சந்தாவை பெருங்கள்.
அமேசான் நிறுவனத்தின் ஒரு வருட ப்ரைம் சந்தாவின் விலை 999 ரூபாய். இதே ஒரு மாதத்திற்கு வேண்டுமெனில் அதன் மதிப்பு 129 ரூபாய்.
இதுமட்டுமின்றி ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் மற்றும் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள், சில குறிப்பிடப்பட்ட திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், இந்த அமேசான் சந்தாவை இலவசமாகவே வாழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supermoon and Geminid Meteor Shower 2025 Set to Peak Soon: How to See It
Flipkart Buy Buy 2025 Sale Date Announced; Discounts on iPhone 16, Samsung Galaxy S24, and More Expected