லட்சக் கணக்கான தயாரிப்புகளுடன், ப்ரைம் வீடியோ மற்றும் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றிலும் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Photo Credit: Amazon
அமேசான் 'ப்ரைம் டே' விற்பனை 48 மணி நேரங்களுக்கு நீடிக்கவுள்ளது
ஆமேசான் நிறுவனம் நடத்தும் 'ப்ரைம் டே 2019' சேல், வரும் ஜூலை 15 அன்று துவங்கவுள்ளது. இந்த விற்பனை 48 மணி நேரங்களுக்கு நீடிக்கவுள்ளது. இது சென்ற ஆண்டு நடந்த விற்பனையை விட 12 மணி நேரங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையாக இந்த 'ப்ரைம் டே 2019' சேல் இருக்கும் என அமேசான் நிறுவனம் உறுதியளித்துள்ளது. லட்சக் கணக்கான தயாரிப்புகளுடன், ப்ரைம் வீடியோ மற்றும் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றிலும் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்னும், இந்த 'ப்ரைம் டே' விற்பனை துவங்க ஒரு வாரம் கூட முழுமையாக இல்லை. ஜூலை 15 நல்லிரவு 12 மணிக்கு துவங்கவுள்ள இந்த விற்பனையில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும் என கூறியுள்ளது. பணத்தை சேமித்துக்கொள்ள, இந்த விற்பனை நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
முன்னதாக கூறியது போல இந்த 'ப்ரைம் டே' விற்பனையில் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். அதனால், நீங்கள் ப்ரைம் வாடிக்கையாளராக இல்லை என்றால், முதலில் ப்ரைம் சந்தாவை பெருங்கள்.
அமேசான் நிறுவனத்தின் ஒரு வருட ப்ரைம் சந்தாவின் விலை 999 ரூபாய். இதே ஒரு மாதத்திற்கு வேண்டுமெனில் அதன் மதிப்பு 129 ரூபாய்.
இதுமட்டுமின்றி ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் மற்றும் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள், சில குறிப்பிடப்பட்ட திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், இந்த அமேசான் சந்தாவை இலவசமாகவே வாழங்குகிறது.
முன்னதாக, எதை வாங்க வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள். அமேசான் நிறுவனம், ஏற்கனவே 10 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் இடம் பெற்றிடுக்கும் என கூறியுள்ளது. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளை அமேசான் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.
இந்த விற்பனை 48 மணி நேரங்கள் நடக்கும் என்றாலும், சிறந்த சலுகைகள், நீண்ட நேரம் நீடித்திருக்காது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.
48 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விற்பனை மே 15-ன் நல்லிரவு 12 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த விற்பனை ஜூலை 16 வரை தொடரும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z TriFold Fresh Leaks Reveal 5,437mAh Battery, Snapdragon SoC, and More
Google Will Now Allow 'Experienced Users' to Sideload Apps on Android