Photo Credit: Amazon
அமேசான் நிறுவனம் முன்னதாக 'ப்ரைம் டே' விற்பனைக்கான தேதிகளை அறிவித்திருந்தது. அதன்படி இந்த 'அமேசான் ப்ரைம் டே 2019' (Amazon Prime Day 2019) விற்பனை ஜூல 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த 'ப்ரைம் டே' விற்பனை என்பது ஒவ்வொரு ஆண்டு அமேசான் நிறுவனம், தனது ப்ரைம் வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்படும் விற்பனை. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த விற்பனை நடைபெருகிறது, உலகம் முழுவதிலும் இது ஐந்தாவது முறை இந்த 'ப்ரைம் டே' விற்பனை நடைபெருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு 36 மணி நேரம் மட்டுமே நடந்த இந்த விற்பனை, இந்த ஆண்டு 48 மணி நேரம் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ள இந்த விற்பனையில், 1 மில்லியன் அளவிலான சலுகைகளை உலகம் முழுவதும் வழங்கவுள்ளது அமேசான் நிறுவனம். இந்த ஆண்டின் மிகப்பெரிய சலுகை விற்பனை இந்த 'அமேசான் ப்ரைம் டே' விற்பனையாக அமையலாம்.
இந்த விற்பனையில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்?
இந்தியாவில், இந்த 'ப்ரைம் டே' விற்பனையின் பொழுது 1000 புதிய தயாரிப்புகளை அமேசான் நிறுவனம் அறிமுக்கப்படுத்தவுள்ளது. இந்த புதிய தயாரிப்புகள் ஒன்ப்ளஸ், அமேசான் பேசிக்ஸ், சாம்சங், இன்டெல் மற்றும் மற்ற முன்னனி நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் இந்த விற்பனையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விற்பனையில் பல லைட்னிங் டீல்களை வழங்கவுள்ளது.
முன்னதாக, அமேசான் மொபைல்போன்களுக்கு பல சலுகைகள் மற்றும் டீல்களை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும், பல பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு நிறைய தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, சில பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு இதுவரை என்றும் இல்லாத சலுகைகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
மொபைல்போன்கள் மட்டுமின்றி, இந்த 'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனையில், 5000 மேற்பட்ட மின்னனு பொருட்களுக்கும் சலுகைகளை வழங்கவுள்ளது அமேசான் நிறுவனம். இந்த விற்பனையில் லேப்டாப்களுக்கு 35,000 ரூபாய் வரை தள்ளுபடிகளை வழங்கவுள்ளது. அமேசான் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச், என்றும் இல்லாத அளவு குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என அமேசான் நிறுவனம் உறுதியளித்துள்ளது. டி.எஸ்.எல்.ஆர் மற்றும் சோனி மிரர்லெஸ் கேமராக்களுக்கு வட்டி இல்லாத ஈ.எம்.ஐ வசதிகளையும் வழங்கவுள்ளது.
அமேசான் நிறுவனம், இந்த விற்பனையில் எல்.இ.டி டிவிக்களுக்கு 50 சதவிதம் வரை தள்ளுபடியை வழங்கவுள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையில் வீட்டு பொருட்களும் இடம் பெற்றிருக்கும் என அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விற்பனையில் புத்தகங்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடியை வழங்கவுள்ளது.
இந்த விற்பனையில் அறிமுகமாகும் புதிய தயாரிப்புகள்!
ஒன்ப்ளஸ், அமேசான் பேசிக்ஸ், சாம்சங், இன்டெல் மற்றும் மற்ற முன்னனி நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் இந்த விற்பனையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விற்பனையில் ஆரஞ்ச் நிற கேலக்சி M40 ஸ்மார்ட்போன், புதிய லேப்டாப்கள், ஒன்ப்ளஸ் நிறுவனத்திடமிருந்து புதிய ஆச்சரியங்கள் என பலவற்றை இந்த விற்பனையில் எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்