சீன நிறுவனமான சியோமி தனது தயாரிப்பான எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சிக்கு இன்று விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ரூ.49,999க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வழங்கப்பட்ட விலை குறைப்புக்குப் பின்னர் எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சி ரூ.47,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
சாம்சங் தனது புதிய 4கே யுஹெச்டி ஸ்மார்ட் தொலைக்காட்சியை இந்தியாவில் ரூ.41,990க்கு அறிமுகம் செய்த பின்னர் இந்த விலை குறைப்பை சியோமி நிறுவனம் அறிவித்திருக்கலாம் என பரவலாக கருத்து கூறப்படுகிறது.
இந்த விலை குறைப்பு பற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சியோமி நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மனு குமார் ஜெயின், எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சியின் சிறப்பம்சங்களைப் பற்றி விளக்கினார்.
அவர் 'எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சிதான் உலகத்தின் மிக மெல்லிய ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி' என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். கூகுள் உதவியாளர் அமைப்பைக் கொண்ட இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி கடந்த ஆண்டு அறிமுகமாகி விற்பனைக்கு வெளியானது.
முதல் முறையாக விலை குறைக்கப்பட்டுள்ள இந்த எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சியை ஃபிளாப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் வாங்கலாம்
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல 55 இஞ்ச் திரைகொண்ட இந்த தொலைக்காட்சி வெறும் 4.9mm அடர்த்தியை கொண்டுள்ளது. மேலும் 20W ஸ்பீக்கர் கொண்ட இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி பல முன்னணி தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
2ஜிபி ரேம் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட் டிவி, ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சியோமி எம்ஐ எல்இடி டிவி 4 ப்ரோ 55 இஞ்ச் தொலைகாட்சி, கூகுள் உதவியாளர் மற்றும் குரோம்காஸ்ட் தொலிநுட்பத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்