ஜியோ டிவி செயலியை வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி ஜியோ டிவி, 4 புதிய HD சேனல்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் டிவி சேனல்களுக்கான கட்டணங்களை அரசு மாற்றியமைத்தது. இதனால், பல நிறுவனங்களும் பல அதிரடி ஆஃபர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ஜியோ நிறுவனம், ஏற்கெனவே தனது ஜியோ டிவி ஆப் தளத்தில் பல சேனல்களின் சேவைகளை பயனர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில் மேலும் 4 HD சேனல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜியோ பாலிவுட் ப்ரீமியம் HD, ஜியோ பாலிவுட் கிளாசிக் HD, ஜியோ தமிழ் ஹிட்ஸ் HD மற்றும் ஜியோ தெலுங்கு ஹிட்ஸ் HD ஆகிய சேனல்கள்தான் தற்போது ஜியோ டிவி செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஜியோ பாலிவுட் ப்ரீமியம் HD சென்ற வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. மற்ற சேனல்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும்.
இந்த புதிய சேனல்களின் அறிமுகம் மூலம் ஜியோ டிவி-யில், அந்நிறுவனம் சார்பில் மட்டும் 16 பிரத்யேக சேனல்கள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சேனல்களும் பிக்சர்-இன்-பிக்சர் முறையில் பார்க்க முடியும். இந்த வசதியின் மூலம் ஒரு டிவி சேனலைப் பார்த்துக் கொண்டே போனில் மற்ற பணிகளை செய்ய முடியும்.
ஜியோ டிவி, சுமார் 600 சேனல்களை தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆப் மூலம் கேட்ச் அப் டிவி, ரெக்கார்டு செய்வது, பாஸ் செய்வது போன்ற விஷயங்களை செய்ய முடியும். ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, மலையாளம், அசாமீஸ், ஒடியா, உருது போன்ற மொழிகளில் ஜியோ டிவி சேனல் சேவைகளை வழங்கி வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் மட்டும் தற்போது இந்த செயலி கிடைக்கப் பெறுகின்றது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்