Photo Credit: Unsplash
தொடங்கப்படுவது இன்னும் அதிகமான சந்தாதாரர்களைப் பதிவு செய்ய உதவும். இலவச சந்தா பயனர்கள் கட்டாயமாக விளம்பரங்களை பார்க்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வருமானத்தை ஈட்ட அதிக விளம்பரங்களைக் கொண்டு வர உதவலாம் என்று அறிக்கை கூறுகிறது.
Netflix வீடியோ ஸ்ட்ரீமிங் தளமானது உலகம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இலவச திட்டத்தை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. India's Costliest OTT Subscription என்றால், அது Netflix subscription என குறிப்பிடலாம். காரணம், மற்ற தளங்கள் எல்லாம் அரையாண்டு, முழு ஆண்டு சேவைகளை குறைந்த விலையில் வழங்கி வருகையில் Netflix மட்டுமே மாதாந்திர சந்தாவை வழங்குகிறது.
Amazon Prime Videos, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் ஒப்பிடுகையில் Netflixநிறுவனம் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இப்போது பல நாடுகளில் Netflix நிறுவனம் பல விலை பிரிவில் பல விதமான சந்தாவை வழங்கி வருகிறது. அதிக விலை காரணமாக Netflix தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது.
ஆனாலும் பல OTT தளங்களில் விளம்பரங்கள் மூலம் வருவாய் காணும் திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. Netflix நிறுவனம் மட்டுமே ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரங்களே இல்லதாக ஒரு தளமாக திகழ்ந்து வருகிறது. இதனை கைவிட்டு அதன் சந்தாவை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் Netflix நிறுவனம் கென்யாவில் முழுமையான இலவச சந்தாவை வழங்கி வந்தது. ஆனால் கடந்த ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்தது.
இப்போது Netflix நிறுவனத்தின் இலவச சந்தா முயற்சி தொடங்கப்படுவது இன்னும் அதிகமான சந்தாதாரர்களைப் பதிவு செய்ய உதவும். இலவச சந்தா பயனர்கள் கட்டாயமாக விளம்பரங்களை பார்க்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வருமானத்தை ஈட்ட அதிக விளம்பரங்களைக் கொண்டு வர உதவலாம் என்று அறிக்கை கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்