Netflix: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடைசியாக ‘தானாக டிரெயலர்’ ப்ளே ஆவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Photo Credit: Akhil Arora/Gadgets 360
Netflix: இந்த மாற்றம் உடனடியாக அப்டேக் ஆகவில்லை என்றால், இன்னொரு ப்ரொஃபைலுக்குள் சென்று மீண்டும் உங்கள் ப்ரொஃபைலுக்குள் நுழைந்தால், சீக்கிமாக மாற்றம் நிகழும்.
Netflix: நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெகு நாட்களாக இருந்த வந்த ஒரு பிரச்னை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்குள் நுழைந்தவுடன் தன்னிச்சையாக படங்களின் டிரெய்லர்கள் ப்ளே ஆகும். என்னப் படங்கள் அல்லது வீடியோக்கள் இருக்கிறது என்பதை யாராவது நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு உள்ளே சென்று பார்த்தாலே போதும், ஒவ்வொரு படத்தின் டிரெய்லரும் தானாக ப்ளே ஆகும். இதனால், பலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் பயனர்களும் புகார் தெரிவிக்காமல் இல்லை. சுமார் 16.7 கோடி பேர் நெட்ஃபிளிக்ஸ் பயனர்களாக இருக்கிறார்கள். அவர்களில் நிறைய பேர் இது குறித்து பல நாட்களாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடைசியாக ‘தானாக டிரெயலர்' ப்ளே ஆவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ்-ல் எப்படி இந்த ‘ஆட்டோ ப்ளே'-ஐ நிறுத்துவது:
Netflix.com என்கிற முகவரியின் மூலம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தை திறக்க வேண்டும். இல்லையென்றால் மொபைல் செயலி மூலமும் திறக்கலாம். அதற்குப் பின்னர்:
-நெட்ஃபிளிக்ஸ் தளத்திள் சைன் இன் செய்து உள்ளே நுழையவும்
-எந்த ப்ரொஃபைல் உள்ளே இந்த ஆட்டோ ப்ளே இருக்கக் கூடாது என்று கருதுகிறீர்களோ அதற்குள் நுழையவும்
-‘Edit Profile' ஸ்க்ரீனுக்குக் கீழ் ‘Autoplay controls'-ஐ சொடுக்கவும். ‘Autoplay previews while browsing on all devices' என்பதை அன்-செக் செய்யவும்.
-மாற்றத்தை சேவ் செய்யவும். பிறகு ‘Done' என்பதை க்ளிக்கவும்.
இந்த மாற்றம் உடனடியாக அப்டேக் ஆகவில்லை என்றால், இன்னொரு ப்ரொஃபைலுக்குள் சென்று மீண்டும் உங்கள் ப்ரொஃபைலுக்குள் நுழைந்தால், சீக்கிமாக மாற்றம் நிகழும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Truecaller Introduces New Feature to Protect the Entire Family from Call-Based Scams
Starlink Executive Clarifies: India Pricing Was a 'Glitch', Still Awaiting Launch Approval