Netflix பயனாளர்கள் வயிற்றில் பால் வார்த்த Vodafone Idea

Netflix பயனாளர்கள் வயிற்றில் பால் வார்த்த Vodafone Idea

Photo Credit: Vi

ஹைலைட்ஸ்
  • ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது
  • 84 நாட்களுக்கு Free Netflix வசதியுடன் வருகிறது
  • ப்ரீபெய்ட் திட்டத்தின் காலத்திற்கு Netflix திட்டம் செயலில் இருக்கும்
விளம்பரம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய Telecom நிறுவனமான Vodafone Idea தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியா உலகளவில் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான Netflix உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக Free Netflix திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் பயனர்கள் தங்கள் விருப்பப்படி மொபைல், தொலைக்காட்சி அல்லது டேப்லெட் ஆகியவற்றில் ஸ்ட்ரீமிங் அனுபவத்துடன் உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அனுபவிக்க முடியும் என்று வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. Vodafone Idea தற்போது அதன் ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு Netflix வழங்கத் தொடங்கியுள்ளது

Netflix அடிப்படை சந்தாவுடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டேட்டா தொகுப்பை வழங்கும் இரண்டு புதிய ப்ரீ-பெய்டு பேக்குகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மொபைலுடன் சேர்ந்து டிவியில் Netflix பார்க்க முடியும்.

முதல் பேக் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் Netflix பேசிக் (டிவி அல்லது மொபைல்) ரூ 998க்கு வருகிறது. இது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இரண்டாவது பேக் விலை ரூ.1,399. இது 84 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் Netflix பேசிக் (டிவி அல்லது மொபைல்) உடன் 2.5ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ.1,099க்கு 70 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம்.

இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாவுடன் வோடபோன் ஐடியா (Vi) ப்ரீபெய்ட் திட்டம்: 

ஏற்கனவே Netflix கணக்கை வைத்திருக்கும் பயனர்கள் மற்றும் இன்னும் Netflix கணக்கை உருவாக்காதவர்கள் என இரு தரப்பினரும் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். ரீசார்ஜ் முடிந்ததும் பயனர்கள் Vi ஆப்பை திறந்து அதனுள் Netflix என்பதை கிளிக் செய்த பிறகு இந்த திட்டத்தில் இணையலாம். 

ஒரு பயனர் ஏற்கனவே Netflix திட்டத்திற்கு சேர்ந்திருந்தால், அவர்களின் தற்போதைய சந்தாவை இடைநிறுத்தி, தானாகவே Vi திட்டத்தைத் தொடங்கும். இருப்பினும், ஒரு பயனர் ஆப்பிள் வழியாக Netflixக்கு சந்தா செலுத்தியிருந்தால், அவர்கள் முதலில் சந்தாவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிந்ததும், பயனர் முன்பு சேர்க்கப்பட்ட கட்டண முறைக்கு மாற்றப்படுவார். 

சாதாரணமாக பார்த்தால் Netflix Basic திட்டம் மாதம் ரூ199 வருகிறது. இது அதிகபட்சமாக 720p வீடியோ தெளிவுத்திறனுடன் வருகிறது. ஒரு நேரத்தில் ஒரு சாதனத்தில் பார்க்கலாம்.  டிவி, கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் பார்க்கலாம். படங்களை ஆஃப்லைனில் பார்க்க எந்த ஒரு சாதனத்திலும் வீடியோவை டவுன்லோட் செய்யும் வசதியும் உள்ளது. மாதம் 199 செலுத்த வேண்டிய இந்த திட்டத்தை வோடபோன் ஐடியா சலுகை விலையில் கொடுக்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone Idea, Netflix, Free Netflix Vodafone
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »