Photo Credit: HBO
கேம் ஆஃப் த்ரோன் 8வது சீசனை மீண்டும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 8வது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் 8வது சீசனை மீண்டும் படமாக்கக் கோரி இணையம் வழியாக கோரிக்கை மனு ஒன்று உருவாக்கி அதில் கையெழுத்து இட்டு வருகின்றனர்.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவரால் எழுதப்பட்ட படைப்பாகும். இதைப் பயன்படுத்தியே காட் சீரியஸ் உருவாக்கப்பட்டது. கோரிக்கை மனுவில் மீண்டும் டேவிட் பெனிஃப் மற்றும் டி.பி.வெய்ஸ் இருவரும் மீண்டும் திரைக்கதை எழுதக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். டேவிட் பெனிஃப் மற்றும் டி.பி வெய்ஸ் இருவரும் 5 முறை எம்மி விருதினை பகிர்ந்துள்ளனர். 2015 மற்றும் 2016 ஆண்டுக்கான “பேட்டில் ஆஃப் பாஸ்டர்ட்ஸ்” என்ற எபிசோடுக்காகவே பெற்றனர்.
Change.org என்ற இணைய தளத்தில் “டேவிட் பெனிஃப் மற்றும் டி.பி.வெய்ஸ் இருவரும் திறமையற்ற, திறனற்ற எழுத்தாளர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது. இதனால் அவர்களை மாற்றி மீண்டும் 8வது சீசனை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சீசசனின் முதல் இரண்டு எபிசோடுகள் சாதகமான வரவேற்பை பெற்றன.
‘தி லாஸ்ட் ஆஃப் தி ஸ்டார்க்ஸ்' மற்றும் ‘தி பெல்ஸ்' ஆகிய இரண்டு எபிசோடும் ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்