ஜொமேட்டோ, புனே உணவகத்திற்கு 55,000 ரூபாய் அபராதம், காரணம் என்ன?

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 8 ஜூலை 2019 12:25 IST

ஒரு நுகர்வோர் நீதிமன்றம் ஆன்லைன் உணவு விநியோக தளமான ஜொமேட்டோவுடன் சேர்த்து ஒரு புனே உணவகத்திற்கு 55,000 ரூபாய் அபராதம் அளித்துள்ளது. காரணம் என்னவென்றால், ஒருவருக்கு சைவ உணவிற்கு பதில், அசைவ உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.

சண்முக் தேஷ்முக் (Shanmukh Deshmukh) என்ற ஒரு வழக்கறிஞர், ஜொமேட்டோவின் ஒரு உணவகத்தில் பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு அந்த உணவகத்தால் அளிக்கபட்டது என்னவென்றால், சிக்கன் மசாலா!

இதை அடுத்து, இவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜொமேட்டோ மற்றும் அந்த உணவகத்திற்கு 55,000 ரூபாய் அபராதம்  விதித்தது. அதுமட்டுமின்றி, இந்த அபராதத்தை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அந்த வழக்கறிஞர் கூறுகையில்,"இரண்டு உணவுகளுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். அதனால் சிக்கன் என்று தெரியாமல் அந்த உணவை சாப்பிட்டுவிட்டேன்'' என கூறியுள்ளார். மேலும், அவர் கூறியது, இதுபோல அவருக்கு உணவை மாற்றி அளிப்பது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக இது நேர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஜொமேட்டோ நிறுவனம் , இதுகுறித்து கூறுகையில்,"ஏற்கனவே அவருக்கு அந்த உணவிற்கான பணம் திரும்ப அளிக்கப்பட்டது. அவர் ஜொமேட்டோ தளத்தின்மீது அவதூறு பரப்பவே, இம்மாதிரி வழக்கை பதிவு செய்துள்ளார்" என கூறியுள்ளார்.

அந்த உணவகமும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது. 

அதன்பின், இந்த உணவகம் மற்றும் ஜொமேட்டோ நிறுவனத்திற்கு, உணவு தவறாக விநியோகித்ததற்காக 50,000 ரூபாயும், மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 5,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Zomato, Pune, India
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; பெரிஸ்கோப் கேமரா உறுதி
  2. உலகளாவிய வெளியீட்டிற்கு முன் சியோமி 17T, 17 ப்ரோ விலை, ஸ்டோரேஜ் விவரங்கள் கசிவு
  3. விண்டோஸ் 11 கணினியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை வெப்கேமாகப் பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  4. வாட்ஸ்அப்பில் உங்கள் எண்ணை மறைப்பது எப்படி: சிறந்த தனியுரிமைக்காக யூசர்நேம் அமைப்பது எப்படி
  5. சியோமி 17T தொடர் இரு டிஸ்ப்ளே அளவுகள், புதிய வண்ணங்களில் வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்
  6. HMD வைப் 2 5G, ரெட்மி A7 4G, லாவா யுவா ஸ்டார் 3: இந்தியாவில் விலை மற்றும் அம்சங்கள் ஒப்பீடு
  7. IMEI தரவுத்தளத்தில் கசிந்த iQOO 16: உலகளாவிய மற்றும் இந்திய அறிமுகம் உறுதியானதாக அறிக்கை
  8. நெட் நியூட்ராலிட்டி கவலைகளால் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவை ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை
  9. சியோமி 17T இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; உலகளாவிய அறிமுகத்திற்கு ஒரு வாரம் கழித்து வரவிருக்கிறது
  10. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.