உணவு தவறாக விநியோகித்ததற்காக 50,000 ரூபாயும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 5,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நுகர்வோர் நீதிமன்றம் ஆன்லைன் உணவு விநியோக தளமான ஜொமேட்டோவுடன் சேர்த்து ஒரு புனே உணவகத்திற்கு 55,000 ரூபாய் அபராதம் அளித்துள்ளது. காரணம் என்னவென்றால், ஒருவருக்கு சைவ உணவிற்கு பதில், அசைவ உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
சண்முக் தேஷ்முக் (Shanmukh Deshmukh) என்ற ஒரு வழக்கறிஞர், ஜொமேட்டோவின் ஒரு உணவகத்தில் பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு அந்த உணவகத்தால் அளிக்கபட்டது என்னவென்றால், சிக்கன் மசாலா!
இதை அடுத்து, இவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜொமேட்டோ மற்றும் அந்த உணவகத்திற்கு 55,000 ரூபாய் அபராதம் விதித்தது. அதுமட்டுமின்றி, இந்த அபராதத்தை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அந்த வழக்கறிஞர் கூறுகையில்,"இரண்டு உணவுகளுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். அதனால் சிக்கன் என்று தெரியாமல் அந்த உணவை சாப்பிட்டுவிட்டேன்'' என கூறியுள்ளார். மேலும், அவர் கூறியது, இதுபோல அவருக்கு உணவை மாற்றி அளிப்பது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக இது நேர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜொமேட்டோ நிறுவனம் , இதுகுறித்து கூறுகையில்,"ஏற்கனவே அவருக்கு அந்த உணவிற்கான பணம் திரும்ப அளிக்கப்பட்டது. அவர் ஜொமேட்டோ தளத்தின்மீது அவதூறு பரப்பவே, இம்மாதிரி வழக்கை பதிவு செய்துள்ளார்" என கூறியுள்ளார்.
அந்த உணவகமும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்பின், இந்த உணவகம் மற்றும் ஜொமேட்டோ நிறுவனத்திற்கு, உணவு தவறாக விநியோகித்ததற்காக 50,000 ரூபாயும், மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 5,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Asus Reportedly Halts Smartphone Launches ‘Temporarily’ to Focus on AI Robots, Smart Glasses
New Solid-State Freezer Could Replace Climate-Harming Refrigerants