ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் தனது பயனாளிகளுக்காக ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட் படி பயனாளிகளின் குறுஞ்செய்திகளை படிக்க உரிமையாளரின் கைவிரல் ரேகை தேவைப்படும்.
இந்த புதிய அப்டேட் மூலம் பயனாளிகளின் தனிபட்ட அல்லது முக்கியமான குறுஞ்செய்திகளை பாதுகாக்க முடியும் என நம்பப்படுகிறது. மேலும் WABetaInfo என்னும் இணையதளம் அளித்த தகவல் படி இந்த புதிய பாதுகாப்பு முறை வாட்ஸ் ஆப் பிட்டாவில் இன்னும் கட்டமைப்பு நிலையில் இருப்பதாக தெரிகிறது.
ஐ போன்க்கு முகத்தை வைத்து அன்லாக் செய்யும் முறை மற்றும் விரலால் தொட்டு அன்லாக் செய்யும் முறையை வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கு முன் கண்டுபிடித்தது. அந்த அப்டேட் இன்னும் பிராசஸில் உள்ள நிலையில் தற்போது அண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்காக கைவிரல் ரேகை பதியும் முறை கட்டமைத்து வரப்படுகிறது.
ஒரு தனி பிரிவில் இந்த பாதுகாப்பு அமைப்பு இருக்கும் என்னும், இந்த அப்டேட் மூலம் மற்றவர்கள் நமது குறுஞ்செய்திகளை பார்ப்பதில் இருந்து தடுக்க முடியும். வாட்ஸ் ஆப்பை திறப்பதற்கு முன்னர் கைவிரல் ரேகையை பதிய வேண்டும் என்னும் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை படிப்பதற்கு இல்லை என்பது கூடுதல் தகவல்.
மேலும் இந்த அப்டேட் அண்ட்ராய்டு போனுக்கு உடனடியாகவும் பின்னர் ஐ போனுக்கும் பொருந்துமாறு செயல் படுத்தப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்