WhatsApp-ல் இந்த மெஸேஜ் அனுப்பும் டிரிக் பற்றி தெரியுமா - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 9 ஏப்ரல் 2020 11:22 IST
ஹைலைட்ஸ்
  • தொடர்பைச் சேமிக்காமல் வாட்ஸ்அப் மெஸேஜை அனுப்பவும்
  • ஸ்மார்ட்போனில் உள்ள எந்த browser-ல் இருந்தும் இதைச் செய்யலாம்
  • இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் வேலை செய்கிறது

ஆம், எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம்

WhatsApp என்பது உலகின் மிகவும் பிரபலமான messaging apps-ல் ஒன்றாகும். தற்போது, வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், வாட்ஸ்அப்பில், இது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் நிறைய WhatsApp privacy settings, “My Contacts” ​-க்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தெரியாத நபர்கள் உங்கள் எண்ணை சேமித்து, உங்கள் profile picture-ஐ காண்பதை நீங்கள் விரும்பவில்லையா? அதனால்தான், தொடர்புகளைச் சேர்க்காமல் வாட்ஸ்அப் மெஸேஜை எப்படி அனுப்புவது என்பதை உங்களுக்குச் சொல்லப்போகிறோம்.

வாட்ஸ்அப்: unsaved எண்களுக்கு மெஸேஜ் அனுப்புவது எப்படி? 

Android மற்றும் iOS இரண்டிலும், சேமிக்கப்படாத எண்களுக்கு எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புவதற்கான படிநிலைகள் இங்கே: 

  1. உங்கள் போனின் browser-ஐத் திறக்கவும். இப்போது, address bar-ல் உள்ள http://wa.me/xxxxxxxxx அல்லது  http://api.whatsapp.com/send?phone=xxxxxxxxx இந்த link-ஐ copy, paste செய்யலாம்.
  2. ‘Xxxxxxxxx'-க்கு பதிலாக, நீங்கள் நாட்டின் குறியீட்டோடு போன் எண்ணையும் enter செய்ய வேண்டும், எனவே நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் எண் +919911111111 எனில், link, http://wa.me/919911111111 ஆக மாறுகிறது. 
  3. link-ஐ தட்டச்சு செய்தவுடன், link-ஐ திறக்க enter-ஐ தட்டவும்.
  4. அடுத்து, பெறுநரின் போன் எண் மற்றும் பச்சை செய்தி பொத்தானைக் கொண்ட ஒரு வாட்ஸ்அப் வலைப்பக்கத்தைக் காண்பீர்கள். பச்சை செய்தி பொத்தானைத் தட்டவும், நீங்கள் வாட்ஸ்அப்பிற்கு திருப்பி விடப்படுவீர்கள்.


Siri Shortcuts வழியாக non-contact-க்கு வாட்ஸ்அப் மெஸேஜ் அனுப்புவது எப்படி?

நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால், Siri Shortcuts வழியாக சேமிக்கப்படாத எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புவதற்கான படிநிலைகள் இங்கே: 

  1. முதலில், Siri Shortcuts செயலியை பதிவிறக்கவும்.
  2. செயலியைத் திறந்து, கீழ் வலதுபுறத்தில் உள்ள Gallery tab-ஐ தட்டவும். இப்போது நீங்கள் விரும்பும் shortcut-ஐ சேர்த்து, ஒரு முறை இயக்கவும். 
  3. அடுத்து, Settings > ShortcutsAllow Untrusted Shortcuts-ஐ இயக்கவும். இது யாரிடமிருந்தும் Siri Shortcuts-ஐ இயக்க உங்களை அனுமதிக்கும். நீங்கள் சீரற்ற shortcuts-ஐப் பதிவிறக்கம் செய்தாலும் கூட, நீங்கள் எதிர்பார்ப்பதைச் செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட படிநிலைகளை ஆய்வு செய்யுங்கள்.
  4. அது முடிந்ததும், உங்கள் ஐபோனில் link-ஐத் திறந்து பதிவிறக்க Get Shortcut பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  5. நீங்கள் Shortcut செயலிக்கு திருப்பி விடப்படுவீர்கள். Add Untrusted Shortcut-ஐத் தட்டவும்.
  6. Shortcuts-ஐத் திறந்து, My Shortcuts tab-ல் WhatsApp to Non Contact shortcut-ஐத் பார்க்கவும். நீங்கள் அதை இங்கிருந்து இயக்கலாம் அல்லது shortcut-ன் மேலே உள்ள மூன்று புள்ளிகள் ஐகானைத் தட்டவும்> பின்னர் home screen-ல் விரைவான வெளியீட்டு shortcut-ஐ உருவாக்க Add to Home Screen என்பதைத் தட்டவும்.
  7. இதை இயக்கியதும், பெறுநரின் எண்ணை enter செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். நாட்டின் குறியீட்டோடு அதை Enter செய்யவும், புதிய message window-வைத் திறந்து நீங்கள் வாட்ஸ்அப்பிற்கு திருப்பி விடப்படுவீர்கள்.

OnePlus 8 leaks look exciting but when will the phones launch in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, Android, iOS, Chrome, Safari, Firefox, Opera
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  2. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  3. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  4. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
  5. iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
  6. Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
  7. Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
  8. Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு
  9. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  10. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.