இனி கவலைப்பட தேவையில்லை. அழிந்த மெசேஜ்களை மீட்டெடுப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளது.
ஐக்ளவ்டு (iCloud) அல்லது கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகியவற்றிலிருந்து, வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுத்துக்கொள்ளலாம்
எப்போதாவது வாட்ஸ்ஆப்பில் தவறுதலாக மெசேஜ்களை அழித்திருக்கிறீர்களா, பின் ஐயோ மெசேஜ்களை அழித்து விட்டோமே என கவலைப்பட்டுள்ளீர்களா? இனி கவலைப்பட தேவையில்லை. அழிந்த மெசேஜ்களை மீட்டெடுப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளது.
இப்படி அழிந்துபோன மெசேஜ்களை மீட்டெடுக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஐக்ளவ்டு (iCloud) அல்லது கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகியவற்றிலிருந்து, மெசேஜ்களை மீட்டெடுப்பது. மற்றொன்று வாட்ஸ்ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்து சமீபத்திய பேக்-அப்பிலிருந்து, மெசேஜ்களை மீட்டெடுப்பது. இந்த வழியில் ஒரு பிரச்னை உள்ளது. அந்த பேக்-அப்பிற்கு பின் அனுப்பிய மெசேஜ்கள் திரும்ப வராது.
சரி இதை எப்படி செய்வது?
முதலில் உங்கள் ஸ்மார்ட்போன்களில் சேட் பேக்-அப் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆண்ட்ரய்ட் போனில், வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்து 'Settings > Chats > Chat backup' இந்த செயல்பாட்டை பின்பற்றுங்கள். பின் அங்கு சேட் பேக்-அப் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதில் சேட் பேக்-அப் தினமும் செயல்பட வேண்டுமா, அல்லது வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை பேக்-அப் செய்யப்பட வேண்டுமா என்ற வசதிகள் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமின்றி கூகுள் ட்ரைவில், உங்கள் கூகுள் கணக்கில் இந்த சேட்டை பேக்-அப் செய்துகொள்வதற்கான வசதிகளும் இடம் பெற்றிருக்கும்.
உங்கள் ஐபோனில், வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்து 'Settings > Chats > Chat backup' இந்த செயல்பாட்டை பின்பற்றுங்கள். அதை ஆட்டோ பேக்-அப் மற்றும் உடனடி பேக்-அப் என இரண்டு வசதிகள் இருக்கும். இந்த வசதிகளை பயன்படுத்தி ஐக்ளவ்டில் சேட் பேக்-அப் செய்து கொள்ளலாம்.
சரி பேக்-அப் செய்துவிட்டோம், இப்போது அதை எப்படி மீட்டெடுப்பது?
கூகுள் ட்ரைவ், ஐக்ளவ்டு பேக்-அப்பிலிருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுப்பது எப்படி?
1. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்.
2. உங்கள் மொபைல் நம்பரை அளித்து மீண்டும் வாட்ஸ்ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு கூகுள் ட்ரைவிலிருந்தும், ஐபோன்களுக்கு ஐக்ளவ்டிலிருந்து பேக்-அப் செய்வதற்கான வசதி காண்பிக்கப்படும்.
4. அங்கு காணப்படும் 'Restore' பட்டனை அழுத்தி, அழிந்துபோன உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுத்துக்கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் போனின் லோக்கல் பேக்-அப்பிலிருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுப்பது எப்படி?
1. File Manager > WhatsApp > Database, இதை பின்பற்றி உள்ளே செல்லுங்கள்.
2. அங்கு 'msgstore.db.crypt12' என்ற ஒரு டாக்குமென்ட் இடம் பெற்றிருக்கும். அதை தேர்வு செய்து 'msgstore_BACKUP.db.crypt12' என பெயர் மாற்றுங்கள்.
3. பின் 'msgstore-YYYY-MM-DD.1.db.crypt12' இம்மாதிரி பல டாக்குமென்ட்கள் அங்கு இடம் பெற்றிருக்கும். அதில் மிக சமீபத்திய டாக்குமென்ட் எது என்பதை பார்த்து, அதை 'msgstore.db.crypt12' என பெயர் மாற்றுங்கள்.
4. பின் உங்கள் கூகுள் ட்ரைவை ஓபன் செய்து அங்குள்ள பேக்-அப் (Backups) என்ற வசதியை தேர்வு செய்யுங்கள். அதில் உள்ள வாட்ஸ்ஆப் பேக்-அப் டாக்குமென்ட்டை அழித்துவிடுங்கள். இது லோக்கல் பேக்-அப்பிலிருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுக்க உதவும்.
5. பின் உங்கள் வாட்ஸ்ஆப்பை அன்-இன்ஸ்டால் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
6. தற்போது அங்கு காணப்படும் 'Restore' பட்டனை அழுத்தி, அழிந்துபோன உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை மீட்டெடுத்துக்கொள்ளுங்கள்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India