20 சதவிகிதம் வரை தள்ளுபடி: வழங்கவுள்ள ஓலாவின் புதிய கிரடிட் கார்டுகள்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 16 மே 2019 12:21 IST
ஹைலைட்ஸ்
  • ஓலா மனி எஸ் பி ஐ கிரடிட் கார்டுகளை, விசா மூலம் வழங்கவுள்ளது
  • முன்னதாக பேடிஎம் இம்மாதிரியான கார்டுகளை வெளியிட்டுள்ளது
  • இந்த கார்டுகளை இலவசமாக வழங்கவுள்ளது

Ola Credit Card: ஒலா நிறுவனத்தின் புதிய ஓலா மனி எஸ் பி ஐ கிரடிட் கார்டுகள்


ஓலா நிறுவனம் புதிய முயற்சியாக, எஸ் பி ஐ வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து, ஓலா மனி எஸ் பி ஐ கிரடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாதிரியான தளத்தில், இம்மாதிரியான கார்டுகளின் அறிமுகம் என்பது, இந்தியாவில் இதுவே முதன்முறை என்று கூறியுள்ள ஓலா நிறுவனம், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த மற்றும் பல புதிய வாடிக்கையளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கிலேயே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஓலா நிறுவனம்.

முன்னதாக பேடிஎம் நிறுவனம், சிடி வங்கியுடன் இணைந்து தனக்கென சொந்தமான பேடிஎம் ஃப்ர்ஸ்ட் கிரடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியதற்கு பிறகு, ஓலா நிறுவனமும் இம்மாதிரியான அறிவிப்பை அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரியான கிரடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவது இந்தியாவில் இதுவே முதன்முறை என்றாலும் இந்த இரு நிறுவனங்களும் அடுத்து அடுத்து கிரடிட் கார்டு வசதியை அறிவித்திருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 

"இசைவானது, நெகிழ்வானது மற்றும் எளிய பணப்பரிமாற்றம்" என்று இந்த திட்டத்தை பற்றி குறிப்பிட்டுள்ள ஓலா நிறுவனம், ஓலா மனி எஸ் பி ஐ கிரடிட் கார்டுகளை, விசா நிறுவனத்தினலான கார்டுகளாக அளிக்கவுள்ளது. மேலும் இந்த கார்டுகளை பெற எந்த விதமான பணமும் செலுத்த தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள ஓலா நிறுவனம், இலவசமாகவே இந்த கிரடிட் கார்டுகளை வழங்கவுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்குள் 1 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த ஓலா கிரடிட் கார்டுகளை வழங்கியிருக்க வேண்டுமென்ற இலக்கையும் நிர்ணயித்துள்ளது, ஓலா நிறுவனம். 

இந்த கார்டுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

ஓலா மனி எஸ் பி ஐ கிரடிட் கார்டுகளை நேரடியாக ஓலா செயலியிலேயே விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது, இந்த நிறுவனம். அந்த நிறுவனம் கேட்கும் சில தகவல்களை மட்டும் உள்ளீடு செய்து, மிக எளிதாகவே இந்த கார்டுகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ள ஓலா நிறுவனம், அந்த கார்டினால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை அதன் செயலியிலேயே பார்த்துக்கொள்ளலாம், அதுமட்டுமின்றி இந்த கார்டுக்கான கணக்கையும் இந்த செயலியிலேயே கையாண்டுகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. மேலும், ஓலா தளத்திலும் இந்த கார்டுகளை விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த கார்டுகளை பெற, எந்த விதமான பணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா மனி எஸ் பி ஐ கிரடிட் கார்டுகளின் கேஷ்பேக் சலுகைகள்!

ஓலாவின் பல சேவைகளுக்கு இந்த கார்டுகள் மூலம் தள்ளுபடி அளித்துள்ளது அந்த நிறுவனம். அதன்படி, இந்த கார்டுகள் மூலம் கார்களை புக் செய்பவர்களுக்கு, 7 சதவிகித கேஷ்பேக், விமான புக்கிங்களுக்கு 5 சதவிகித கேஷ்பேக் உள்நாட்டு ஹோட்டல் புக்கிங்களுக்கு 20 சதவிதமும், வெளிநாட்டு ஹொட்டல் புக்கிங்களுக்கு 6 சதவிகித கேஷ்பேக், மேலும் இந்தியாவிலுள்ள 6,000-திற்குமேற்பட்ட உணவகங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும், மேலும், இந்த கார்டுகள் மூலம் செய்யும் மற்ற செலவுகளுக்கு 1 சதவிகித கேஷ்பேக் என சலுகைகளை வாரி வழங்கியுள்ளது ஓலா நிறுவனம். இதுமட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள் பரிமாற்றத்திற்கு 1 சதவிகித கேஷ்பேக் என அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி,"சுலபமாக பணம் செலுத்தவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதுமட்டுமின்றி இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என கூறினார்.

முன்னதாக கூறியதுபோல, சிடி வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள பேடிஎம் நிறுவனம், தனது நிறுவனத்திற்கான முதல் கிரடிட் கார்டுகளை வெளியிட்டது. "பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்" என அந்த கிரடிட் கார்டுகளுக்கு பெயரிட்டுள்ளது பேடிஎம் நிறுவனம். இந்த கிரடிட் கார்டுகள் ஒரு சதவிகித "யூனிவர்சல் அன்லிமிடெட் கேஷ்பேக்" சலுகையையும் வழங்கவுள்ளது. முன்னதாக இந்த "பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்"-க்கு 500 ரூபாய் ஆண்டு கட்டணம் விதித்துள்ள இந்த நிறுவனம், ஒருவேளை வாடிக்கையாளர்களில் ஒரு வருடத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை பெறுபவர்களுக்கு, அந்த ஆண்டு கட்டணத்தை தளர்த்தியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி பேடிஎம் தளத்தில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Written with inputs from IANS

Disclosure: Paytm's parent company One97 is an investor in Gadgets 360.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Ola, Ola Money, Ola Money SBI Credit Card, SBI, Credit Card
குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. WhatsApp Group-களில் இப்போ @all யூஸ் பண்ணலாம்! முக்கியமான அறிவிப்புகள் இனி எல்லாருக்கும் உடனே போகும்!
  2. JioSaavn-ல் விளம்பரம் இல்லாம பாட்டு கேட்க ஆசையா? ரூ.399-க்கே 1 வருடம் சப்ஸ்கிரிப்ஷன்
  3. iQOO 15-ன் பர்ஃபார்மன்ஸை இனி இந்தியாவிலும் பார்க்கலாம்! Snapdragon 8 Elite Gen 5, OriginOS 6 உடன் நவம்பரில் வருகிறது!
  4. OnePlus-ன் கேமிங் ராட்சசன்! Ace 6-ல் இதுதான் டாப்: Snapdragon 8 Elite, 165Hz ஸ்கிரீன், ரெக்கார்டு பிரேக் பேட்டரி
  5. மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!
  6. கேமரா, பேட்டரி, பர்ஃபார்மன்ஸ் – எல்லாத்துலேயும் டாப்! Realme GT 8 Pro லான்ச்! விலையோ ₹49,440-ல் இருந்து ஆரம்பம்
  7. Samsung Galaxy XR ஹெட்செட் அறிமுகம் – Snapdragon XR2+ Gen 2, AI திறன்! வாங்க ரெடியா?
  8. கேமிங் பிரியர்களுக்கு விருந்து! iQOO 15 வந்துருச்சு – 100x Zoom, மூணு 50MP கேமரா!
  9. வாட்ஸ்அப் யூசர்களே, இனி ChatGPT வேலை செய்யாது! WhatsApp-ன் புதிய விதிமுறைகள்
  10. Redmi K90: 7,100mAh பேட்டரி, Bose ஆடியோ உடன் அக்டோபர் 23ல் அறிமுகம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.