கர்நாடகவில் ஓலா மீண்டும் செயல்படத் தொடங்கியது

கடந்த வெள்ளியன்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சகம். அனுமதியின்று கடந்த ஆறு மாதமாக பைக் டாக்ஸி என்ற சேவையை ஓலா நடத்தி வருவதாகவும், அதனால் ஓலாவின் லைசென்ஸை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

கர்நாடகவில் ஓலா மீண்டும் செயல்படத் தொடங்கியது

புதிய தொழில்நுட்ப கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு கொள்கைகளை உருவாக்க வேண்டும்

விளம்பரம்

ஓலா நிறுவனம் பைக் டாக்ஸி சேவையை அனுமதியில்லாமல் தொடங்கியதற்காக ஓலாவின் லைசென்ஸை கடந்த வெள்ளியன்று இடைநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில் நேற்று முதல் அதன் சேவைத் தொடங்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் பிரியங்கா கார்கே, புதிய தொழில்நுட்ப கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

ஓலாவின் பங்குதாரான மேட்ரிக்ஸ் பார்னர்ஸ் இந்தியா, இந்த விவகாரத்தில் விரைந்து தீர்மானம் எடுத்தது பாராட்டுதலுக்குரியது என்று கூறியுள்ளார். புதிய இளமையான அமைச்சர்கள் வேகத்தையும் புதுமையையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என்று மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியாவின் நிறுவனர் அவ்னிஷ் பஜாஜ் கூறியுள்ளார். 

கடந்த வெள்ளியன்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சகம். அனுமதியின்று கடந்த ஆறு மாதமாக பைக் டாக்ஸி என்ற சேவையை ஓலா நடத்தி வருவதாகவும், அதனால் ஓலாவின் லைசென்ஸை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. 

பெங்களூரில், அனி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (ஓலா கேப்ஸ்) கர்நாடக தேவைக்கேற்ற போக்குவரத்து தொழில்நுட்பங்கள் விதிகள் 2016 இன் படி துணை போக்குவரத்து ஆணையர் சமர்பித்த அறிக்கையின் பின்னணியில், 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20-ம் தேதி வரை வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த உரிமம் விதிமுறைகளின் கீழ் 6 மாதங்களுக்கும் இடை நீக்கம் செய்யப்பட்டது என்று மார்ச் 18 -ம் தேதி கூறியது. 

இந்த ஒழுங்குமுறைக்கு பதிலளித்த ஓலா, வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், போக்குவரத்தை முன்னேற்றவும் அரசாங்கத்துடன் இணைந்து  பணிபுரிவதாக தெரிவித்துள்ளது. தேவைக்கேற்ற போக்குவரத்து தொழில்நுட்பங்கள் விதிகள் 2016 இன் படி ஆப் மூலமாக டாக்ஸி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இருசக்கரவாகன டாக்ஸி சேவைக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »