யூபர் ரைடு பாஸ் செல்லுபடியாகும் காலாவதி தேதியிலிருந்து 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக, உபெர் இந்தியாவில் தனது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவில்லை
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, மார்ச் 24-ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு Uber அனைத்து நகரங்களிலும் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உபெர் தனது ரைடு பாஸின் செல்லுபடியை நீட்டித்துள்ளது. நிறுவனம், புஷ் அறிவிப்பு மூலம் சமீபத்திய அப்டேட் குறித்து தனது ரைடர்ஸுக்கு தெரிவித்துள்ளது.
![]()
தற்போதுள்ள Uber Ride Pass-ஐப் பயன்படுத்தும் ரைடர்ஸ் அனைவருக்கும், பாஸின் செல்லுபடியை காலாவதி தேதியிலிருந்து 21 நீட்டித்துள்ளது.
உபெர், கடந்த வாரம் தனது கேப் சேவையுடன் சுகாதாரப் பணியாளர்களை ஆதரிப்பதற்காக பிரத்தியேகமாக தனது ‘உபெர்மெடிக்' சேவையை அறிமுகப்படுத்தியது. மருத்துவ பயணங்களுக்கான போக்குவரத்தை வழங்குவதோடு, பல நகரங்களில் உள்ள இந்தியர்களுக்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவதற்காக ஆன்லைன் மளிகை நிறுவனங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களுடன் உபெர் தற்போது இணைந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iQOO 15R Price in India, Chipset Details Teased Ahead of Launch in India on February 24