கடந்த சில நாட்களாக கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்டிருந்த மிட்ரான் ஆப் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் மிட்ரான் விரும்பிகள் உற்காகம் அடைந்துள்ளனர்.
சீனாவின் டிக் டாக் ஆப்பிற்கு மாற்றாக இந்திய தயாரிப்பான மிட்ரான் ஆப் கருதடப்படுகிறது. கூகிள் பிளே கொள்கைகளை மீறியதால் இந்த வார தொடக்கத்தில் குறுகிய வீடியோ தளம் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டது. கூகிள் மிட்ரான் தனது “ஸ்பேம் மற்றும் குறைந்தபட்ச செயல்பாடு” கொள்கையை மீறியதாகக் கூறியது. ஆனால் பின்னர் தொழில்நுட்ப நிறுவனமானது டெவலப்பருடன் இணைந்து சிக்கல்களைச் சரிசெய்ய உதவுகிறது என்று தெளிவுபடுத்தியது.
இப்போது, அந்த தெளிவுபடுத்தலுக்கு ஒரு நாள் கழித்து, பயன்பாடு மீண்டும் Google Play இல் உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, மிட்ரான் பயன்பாடு 50 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்திருந்தது.
ஜூன் 2 ம் தேதி கூகிள் கூகிள் பிளேயிலிருந்து மிட்ரானை நீக்கியது. கூகுளின் விதிமுறைகளை மீறியதாக மிட்ரான் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆப் நீக்கப்பட்டது.
இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை அதிகம் காணப்படுகிறது. இதனால் சீன ஆப்பான டிக் டாக்கிற்கு மாற்றமாக 2 மாதங்களுக்கு முன்பு மிட்ரான் வந்தபோது அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இருப்பினும் மிட்ரான் ஆப்பில் தகவல்கள் திருடப்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக மிட்ரான் தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ப்ளே ஸ்டோரின் மீண்டும் மிட்ரான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடு முழுவதும், எல்லை பிரச்னை காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வலுத்து வருவதை காண முடிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்