மித்ரான் ஆப் எளிதில் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக ஆப்பில் கமென்ட் செய்பவர்களின் தகவல்களும் திருடுபோவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது.
இந்தியர்களிடையே மித்ரான் ஆப் வரவேற்பை பெற்று வருகிறது
பிரபல வீடியோ சமூக வலைதளமான சீனாவின் டிக் டாக்கிற்கு போட்டியாக மித்ரான் ஆப் 2 மாதங்களுக்கு முன்பாக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஆப் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான டவுன்லோடுளை கூகுள் பிளே ஸ்டோரில் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் டிக்டாக் என்ற வீடியோ ஆப் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த சூழலில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து இந்தியாவை சீண்டும் போக்கை சீனா எடுத்து வருகிறது. இதனால் அந்நாட்டு பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சீனாவின் டிக்டாக் ஆப்புக்கு, மாற்றாக இந்திய ஆப் சந்தையில் இல்லாமல் இருந்தது. இந்த சூழலில் 2 மாதங்களுக்கு முன்பாக Mitron என்ற ஆப் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இது டிக்டாக்கைப் போன்ற ஆப்சன்களை கொண்டது.
இந்த நிலையில், தற்போது இந்த மித்ரான் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடி டவுன்லோடுகளை கடந்து விட்டதாக அதன் தலைமை செயல் அதிகாரி சிவாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
2 மாதங்களில் இத்தகைய டவுன்லோடை மித்ரான் பெற்றிருப்பதை பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். ஒருமாதத்தில் இந்த ஆப் 50 லட்சம் டவுன்லோடுகளை கடந்திருக்கிறது.
கூகுளின் விதிகளை மீறியதாக மித்ரான் ஆப் சில காலம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் ஆப் கொண்டு வரப்பட்டது.
இதேபோன்று மித்ரான் ஆப் எளிதில் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக ஆப்பில் கமென்ட் செய்பவர்களின் தகவல்களும் திருடுபோவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது.
இந்த சூழலில் ப்ளே ஸ்டோரில் மித்ரான் ஆப் ஒரு கோடி டவுன்லோடுகளை கடந்திருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
The Raja Saab OTT Release Reportedly Leaked Online: What You Need to Know Prabhas Starrer Movie