Instagram has introduced long-form videos in the form of IGTV (Instagram TV). We answer all your questions about the brand new video platform.
இன்ஸ்டாகிராம் தற்போது நீண்ட நேர வீடியோக்களை ஐஜிடிவி என்கிற வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னர் 15 வினாடிகள் வரை தான் வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய முடியும் என்றிருந்த நிலையில், தற்போது ஐஜிடிவியில் 10 நிமிடங்கள் வரை பதிவேற்றம் செய்யலாம். குறிப்பிட்ட சில கணக்குகளில் மட்டும் ஒரு மணி நேரம் வரை செய்ய முடியும்.
ஐஜிடிவி ஒரு தனி செயலியாகவும், இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு அங்கமாகவும் கிடைக்கிறது. ஐஜிடிவி வீடியோக்கள் வெர்டிக்கல் வடிவிலே இருக்கின்றன, இது மொபைல் ஃபோனில் எளிமையாக இருக்கும். ஒரு பில்லியன் பயனர்களை நெருங்கும் இன்ஸ்டாகிராமில் இது அடுத்த கட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
ஐஜிடிவி செயலியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஸ் தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இதில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் லாகின் செய்து, நாம் ஃபாலோ செய்கிற கணக்குகளிலிருந்து வரும் வீடியோக்களைக் காணலாம்.
![]()
நீங்கள் வீடியோக்களை தேடலாம், நீங்கள் பின்தொடரும் கணக்குகளிலிருந்து வரும் வீடியோக்களை காணலாம். பிரபலமான வீடியோக்களை பார்க்கலாம். வீடியோக்களை பார்க்க ஆரம்பித்த உடனே திரையை இடதும், வலதுமாக ஸ்வைப் செய்து, டிவி சேனல்களை மாற்றுவது போல வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் அதிக நேரம் வீடியோக்களை பார்க்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவே இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐஜிடிவி என்பது இன்ஸ்டாகிராம் அனுபவத்தோடு ஒரு இயற்கையான இணைப்பாக வருகிறது. ஒரு சிலர் ஐஜிடிவி செயலியில் இல்லாமல் இன்ஸ்டாகிராம் செயலியிலே அதை பயன்படுத்த விரும்புவார்கள், அதற்கேற்றவாறு தான் இதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஐஜிடிவி படைப்பாளர்களுக்கு பரிசோதித்துப் பார்க்க புதிய தளமாக அமையும். வெர்டிக்கல் வடிவ வீடியோக்கள் ஷூட் செய்து பகிர எளிமையாகவும், மொபைலில் பயன்படுத்த நல்ல அனுபவமாக இருக்கும்.
உங்களுக்கு அதன் பயன்பாடுகள் பற்றி சில கேள்விகள் இருக்கலாம்ம் அதற்கான பதில்களை தான் இங்கு அளிக்க இருக்கிறோம்.
ஐஜிடிவி (இன்ஸ்டாகிராம் டிவி) என்றால் என்ன?
ஐஜிடிவி என்பது நீண்ட நேர வீடியோக்களை பதிவேற்றம் செய்ய இன்ஸ்டாகிராமால் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய செயலியாகும். இது இன்ஸ்டாகிராம் உள்ளே கிடைத்தாலும் கூட, தனி செயலியாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தனியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, ஆனாலும் நீண்ட காலத்தில் தனி செயலியாக பயன்படுத்துவதே சிறப்பாகும்.
மற்ற வீடியோ செயலிகள் மற்றும் சேவைகளிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டிருக்கும்?
ஐஜிடிவி இறுதியில் பிரதான வீடியோ தளங்களான யூடியூப் போன்றவற்றுடன் போட்டி போடுவதற்காகத் தான் தயாரிக்கப்பட்டது, ஆனால் தற்போதைக்கு, இது ஏற்கனவே இருக்கின்ற தளத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய சேவை. இதில் 10 நிமிடங்கள் வரை (சில கணக்குகளுக்கு மட்டும் ஒரு மணி நேரம் வரை) உள்ள வெர்டிக்கல் வடிவிலான வீடியோக்களுக்காக அறிமுகம் செய்யப்படுகிறது. உங்களுடைய செல்போனில் எளிதாக ஒரு வெர்டிக்கல் வடிவிலான வீடியோக்களை ஷீட் செய்து, பதிவேற்றி, பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலி பயன்பாட்டிற்கு யூஸர்- ப்ரெண்ட்லியாக இருக்கும் மற்றும் வேறு எந்த விலையுயர்ந்த உபகரணங்களும் தேவைப்படாது.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மற்றும் வழக்கமான இன்ஸ்டாகிராம் வீடியோக்களை விட ஐஜிடிவி வீடியோக்கள் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்?
இன்ஸ்டாகிராமிலே பல வழிகள் இருக்க புதிதாக வீடியோக்களை பகிர ஏன் ஒரு புதிய செயலி என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். புதிய பயனர்கள் தொடர்ந்து ஸ்டோரீஸ் மற்றும் வழக்கமான வீடியோக்களை பயன்படுத்தலாம். செய்திகளை விரைவாக பதிவிட்டு அது நீண்ட நேரம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு தான் ஸ்டோரீஸ் பயன்படுகிறது. பெரும்பாலான மக்கள் 15 வினாடி வீடியோ அளவு போதுமானது இல்லை என கருதுகின்றனர்.
![]()
ஐஜிடிவியில் உள்ள நீண்ட நேர வீடியோக்கள் என்பது இன்ஸ்டாகிராமில் உள்ள உங்கள் நண்பர்கள் வட்டத்திற்குள்ளாகவே ஒரு சிறிய யூடியூப் செயலி இருப்பது போன்றதாகும். நீண்ட மற்றும் தீவிரமான வீடியோக்களை உருவாக்க, பகிர ஐஜிடிவிக்களை பயன்படுத்தலாம். இப்போதைக்கு, ஐஜிடிவி ஃபில்டர்கள் மற்றும் பிற எஃப்பெக்ட்டுகளை பயன்படுத்த முடியாது, அதனால் இது வழக்கமான வீடியோக்களுக்கு மட்டுமே உரியது என்பதை அறியலாம்.
நான் எவ்வாறு ஐஜிடிவி பயன்படுத்த தொடங்குவது?
அது மிகவும் எளிது. நீங்கள் உங்களுடைய இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்திருந்தால் இந்த அம்சம் ஏற்கனவே உங்கள் மொபைலில் இருக்கும். வலது புறம் மேல் பக்கத்தில் உள்ள அந்த சிறிய டீவி ஐகானை க்ளிக் செய்தால் ஐஜிடிவி வரும். நீங்கள் தனி ஐஜிடிவி செயலியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்தி லாக்கின் செய்து கொள்ளலாம்.
![]()
இந்த செயலிக்குள் வந்துவிட்டால் வீடியோக்களை தேடுவது, பதிவேற்றம் செய்வது என அனைத்துமே எளிமையாக இருக்கும்.
தற்போதைக்கு ஐஜிடிவி செயலியில் கேமரா வசதி கிடையாது. இதனால் நீங்கள் ஏற்கனவே வீடியோவை தான் பதிவேற்றம் செய்ய முடியும் நேரடியாக ஐஜிடிவியில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியாது. வீடியோக்களை பதிவேற்றம் செய்வது எளிது. வலது புறத்தில் உள்ள ப்ளஸ் ஐகானை க்ளிக் செய்து, வீடியோவை தேர்ந்தெடுத்து தலைப்பு மற்றும் விளக்கம் குடுத்தால் போதுமானது. வீடியோக்களை ஃபேஸ்புக்கிற்கும் நேரடியாக பகிர முடியும்.
நான் சொந்தமாக ஐஜிடிவியில் சேனல் தொடங்க முடியுமா?
நிச்சயமாக, ஐஜிடிவியில் உங்களால் சொந்தமாக சேனலை உருவாக்க முடியும். உங்களுடைய ஃப்ரொபைல் படத்தை தேர்வு செய்து மை சேனல் என்கிற ஆப்சனில் சென்று. உங்கள் சேனலுக்கு ஒரு பெயர் கொடுத்தால் தயார். இன்ஸ்டாகிராமில் ஒரு பில்லியன் பயனர்கள் இருக்கின்றனர். அது மேலும் வளர்ந்து வருகிறது. நீங்கள் சீக்கிரமாக தொடங்க வேண்டும், யாரால் கணிக்க முடியும் நீங்களே கூட விரைவில் ஒரு ஐஜிடிவி ஸ்டாராக மாறிப்போகலாம்.
ஐஜிடிவியில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
ஐஜிடிவியில் தற்போது விளம்பரங்கள் வருவதில்லை. ஆனால் இவ்வாறே இருக்கப்போவதும் இல்லை. இந்த தளம் வளர விளம்பரங்கள் எதிர்பார்க்கலாம், புதிய நிகழ்ச்சிகள் கூட வரலாம். அதுவரை நீங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்து உங்களுக்கான ஆடியன்ஸை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch