விற்பனையில் கலக்கும் மொபைல் ஆப்ஸ் & கேம்ஸ்
1. நோவா லாஞ்சர் (ஆண்டிராய்டு)
இந்த புதிய மேன்படுத்தப்பட்ட லாஞ்சர் செயலி நம் விருப்பத்திற்கேற்ப போன் செயல்பாட்டை மாற்ற முடியும். கூகுளின் பிளே ஸ்டோரில் தற்போது ரூபாய் 10 முதல் விற்பணை செய்யப்பட்டு வரும் இந்த நோவா லாஞ்சர் மக்களிடையோ மிக பிரபலமானது.
2. 7 மினிட் வொர்க்கவுட் புரோ (ஆண்டிராய்டு)
தினசரி வாழ்கையில் நெடுநேரம் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இந்த செயிலி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். ரூபாய் 75 முதல் விற்பனைக்கு உள்ள இந்த செயலி, நாம் தினசரி சிறிய அளவாவது உடற்பயிற்சி செய்ய உதவும்.
3. ஃவேன்டாஸ்டிகல் 2 (ஐ.ஓ.எஸ்)
ஐ போனுக்காக பிரத்யோகமாக தயாரிக்கபட்டிருக்கும் இந்த காலெண்டர் செயலி மூலம் 159 ரூபாய்க்கு நம்மால் ஐ.ஓ.எஸ் அப்ளிகேஷனில் இந்த காலொண்டரை பயன்படுத்த முடியும். நாளுக்கு நாள் அட்டவெளி மற்றும் முக்கியமான குறிப்புகளை இதில் குறித்துக்கொள்ள முடியும்.
4. மூண் + ரிடர் புரோ (ஆண்டிராய்டு)
பிளே ஸ்டோரில் தற்போது விற்பனைக்கு உள்ள இந்த செயலி, போன்களில் புத்தகம் வாசிப்பவர்களுக்கு மூண் + ரிடர் புரோ செயலி நல்ல நண்பனாகவே மாறிவிடும். இதை ரூபாய் 200 க்கு வாங்கி நம்மளால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
5. ரீயின்ஸ்; கேம் ஆஃவ் தோரோன்ஸ் (ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்)
‘டிண்டர்' போல வலது மற்றும் இடதுபுறம் திருப்பினால் போதுமானது. மேலும் ரீயின்ஸ்; கேம் ஆஃவ் தோரோன்ஸ் கேம்மை சுமார் 160 ரூபாய்க்கு பதிவிறக்கம் செய்யமுடியும்.
பதிவிறக்கம்: ஐ.ஓ.எஸ் | ஆண்டிராய்டு
6. நெட்வர்க்கு அனலைசர் புரோ (ஆண்டிராய்டு)
நெட்வர்க்கு அனலைசர் புரோ செயலி நாம் உபயோகப்படுத்தும் வைஃபையில் உள்ள குறைகளை தீர்க்க முடியும். நெட்வொர்க்கு சார்ந்த பல பிரச்சனைகள் சரிகட்ட இந்த செயலி உதவுகிறது. ரூபாய் 80 செலுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்.
7. சித் மெய்யர் யின் சிவலைசேஷன் 6 (ஐ.ஓ.எஸ்)
சித் மெய்யர் சிவலைசேஷன் 6 கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இந்த கேம்மை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்றாலும் விளையாட்டிற்குள் வாங்குவதற்க்கு சுமார் ரூ. 1,199 வரை செலவு செய்ய முடியும். இதில் 60 நாட்கள் டிரையல் பேக் இருப்பதால், நம்மால் இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தை உணர்ந்து விளையாட முடியும்.
8. தீ ரூம் 3 (ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்)
இந்த பஸ்சிலை முறியடிக்கும் விளையாட்டை, ஆண்டிராய்டில் 159 ரூபாய்க்கும் ஐ.ஓ.எஸ் யில் கிடைக்கிறது.
பதிவிறக்கம்: ஆண்டிராய்டு| ஐ.ஓ.எஸ்
9. பால்தூர்ஸ் கேட் (ஐ.ஓ.எஸ்)
சுமார் 159 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த கேம், ரோல் பிளே மற்றும் பெரிய ஸ்கீரினில் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.
10. ட்ரூகாலர் பிரிமியம் (ஆண்டிராய்டு)
இந்தியர்களின் மத்தியில் ட்ரூகாலர் மிகவும் பிரபலம். பல வாடிக்கைளர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற போன்கால்களை தடுக்க பயன்படுகிறது. மேலும் அதில் உள்ள பிரிமியம் சலுகையில் சேர்வதன் மூலம் கால்களை ரெக்கார்டு செய்ய முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Centre Notifies DPDP Rules 2025, RTI Amendment 2025 Comes Into Force
WhatsApp Testing Username-Based Search and Calling in Latest iOS Beta: Report