ஒவ்வொரு இயர்போன்களும் வெறும் 4.1 கிராம் எடையைக் கொண்டுள்ளன.
ரெட்மி ஏர்டோட்ஸ் எஸ், புளூடூத் 5.0-ஐப் பயன்படுத்துகிறது மற்றும் voice assistants-ஐ ஆதரிக்கிறது
Redmi Airdots S ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இது இலகுவான ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களில் ஒன்றாகும். இதன் விலை சிஎன்ஒய் 100 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,100) ஆகும். புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஏற்கனவே சீனாவிற்கான நிறுவனத்தின் இ-ஸ்டோடோரில் வாங்குவதற்கு கிடைக்கின்றன. இது கருப்பு கலர் வேரியண்டில் மட்டுமே கிடைக்கின்றன.
Redmi AirDots இயர்போன்ஸ் 7.2 மிமீ டிரைவர்களைப் பயன்படுத்துகின்றன. நீர் எதிர்ப்பிற்கு ஐபிஎக்ஸ் 4-மதிப்பிடப்பட்டவை. ரெட்மி ஏர்டோட்ஸ் எஸ், புளூடூத் 5.0-ஐப் பயன்படுத்துகிறது மற்றும் voice assistants-ஐ ஆதரிக்கிறது. இதில், ரியல் டெக் ஆர்டிஎல் 8763 பிஎஃப்ஆர் புளூடூத் சிப் மூலம் சத்தம் ரத்து உள்ளது. ஒவ்வொரு இயர்போன்களும் வெறும் 4.1 கிராம் எடையைக் கொண்டுள்ளன.
இயர்போன்ஸ் நான்கு மணிநேர பேட்டரி ஆயுள் உள்ளது; கூடுதல் சார்ஜிங் உடன் இணைந்தால், 12 மணிநேர பயன்பாட்டை வழங்கும். ரெட்மி ஏர்டாட்ஸ் எஸ்-ல் low-latency மோட் கேமிங் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது ஸ்மார்ட்போனிலிருந்து இயர்போன்களுக்கு ஒலியை மென்மையாக கடத்த தாமதமின்றி அனுமதிக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Movingstyle Touchscreen Display Launched With Up to Three Hours Battery Life; Movingstyle M7 Tags Along