வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், வோடாபோன் RedX என்கின்ற தனது குறுகிய கால போஸ்ட் பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை 999 ரூபாய்க்குப் பெற முடியும். இந்த புதிய பிளான் மூலம், 50 சதவிகித கூடுதல் டேட்டா வேகம் கிடைக்கும் என்றும், 20,000 ரூபாய்க்கு ஈடுள்ள சலுகைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமிங் சேவைகள், பிரீமியம் கஸ்டமர் சேவைகள், விமானநிலைய சலுகைகள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்குப் பிரத்யேக டீல்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
இதைத் தவிர்த்து அன்லிமிடெட் அழைப்புகள், டேட்டா ஆக்சஸ், 100 குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்ஷன்களும் இருக்கின்றன. தற்போது இருக்கும் வோடாபோன் ரெட் திட்டங்களின் அடுத்த வெர்ஷனாக இந்த RedX திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வோடாபோன் RedX பிளானில், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், Zee5 மற்றும் வோடாபோன் ப்ளேவுக்கான வருடாந்திர சப்ஸ்கிரப்ஷன் வசதிகளும் வரும். இதைத் தவிர்த்து 4 விமான நிலையங்களின் லோஞ்சுகளுக்கு (Lounge) செல்வதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தரப்படும் என்று வோடாபோன் தெரிவித்துள்ளது.
இதைத் தவிர Hotels.com மூலம் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, ஓட்டல் முன்பதிவில் 15 சதவிகித தள்ளுபடி பெறலாம். அதேபோல டிக்கெட் முன்பதிவிலும் 10 சதவிகித தள்ளுபடியை இந்த RedX திட்டம் தருகிறது.
சாம்சங் இந்தியா ஆன்லை ஸ்டோர் மூலம் சில ஸ்மார்ட் போன்களை தள்ளுபடி விலையில் இந்த RedX பிளானை பயன்படுத்தி வாங்க முடியும்.
சில அடிப்படை வசதிகளைப் பொறுத்தவரை, அன்லிமிடெட் உள்ளூர் அழைப்புகள், எஸ்டிடி அழைப்புகள், ஐஎஸ்டி அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 50 பைசா தள்ளுபடி, 100 உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான குறுஞ்செய்திகள், ஒரு மாதத்திற்கு 150 ஜிபி டேட்டா வசதியை அன்லிமிடெட் பாணியில் பெறலாம்.
இந்த புதிய பிளான் உங்களுக்குப் பிடித்திருந்தால், இப்போதே முன்பதிவு செய்யலாம்.
குறுகிய கால திட்டமான இதற்கு யார் முதலில் விண்ணப்பிக்கிறார்களோ, அவர்களுக்கே கொடுக்கப்படும் என்று வோடாபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் 25 ஆம் தேதியன்றோ, அதற்கு முன்னரோ இந்தத் திட்டத்தை வோடோபான், விண்ணப்பித்தவர்களுக்கு செயல்படுத்தும். குறைந்தபட்சம், 6 மாதங்களுக்கு இந்தத் திட்டதை ஒருவர் பயன்படுத்த வேண்டும். 6 மாதத்திற்கு முன்னரே இந்தத் திட்டத்தை விட்டு வெளியேற நினைத்தால், 3,000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்