எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் முன்னணி வகிக்கக்கூடிய நிறுவனக்களில் ஒன்று சோனி. நிறுவனம், தற்போது குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று Sony WF-XB700 true wireless earphones, மற்றொன்று Sony WH-CH710N active noise cancelling headphones.
இதன் விலை 130 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,900) ஆகும்.
இயர்போனின் பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், 9 மணிநேரம் வரை நீடிக்கும்.
இது ஐபிஎக்ஸ் 4 நீர் எதிர்ப்பு மதிப்பீடு, புளூடூத் 5.0 மற்றும் எஸ்.பி.சி மற்றும் ஏஏசி புளூடூத் கோடெக்குகளுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
எக்ஸ்ட்ரா பாஸ் பிராண்டிங் என்றால், punchier bass மற்றும் deeper lows-க்கு இயர்போன்கள் டியூன் செய்யப்படும்.
Sony WH-CH710N, active noise cancellation இயர்போனை 200 டாலருக்கு வழங்குகிறது.
இதன் விலை 200 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,200)-க்கு ஆகும்.
இதன் பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், 35 மணிநேரம் வரை நீடிக்கும்.
இந்த இயர்போன் எஸ்.பி.சி மற்றும் ஏஏசி புளூடூத் கோடெக்குகளை ஆதரிக்கின்றன.
இயர்போனின் முக்கிய அம்சம் செயலில் சத்தம் ரத்துசெய்தல் ஆகும்.
இது சோனியின் மலிவு விலை இயர்போன்களில் ஒன்றாகும்.
புதிய இயர்போன்கள் இப்போது சில உலகளாவிய சந்தைகளில் கிடைக்கின்றன.மேலும், சில மாதங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்