Redmi 8A நாட்டில் முதல் முறையாக திங்கள்கிழமை அதிகாலை 12 மணிக்கு (நள்ளிரவு), இந்தியாவில் Flipkart மற்றும் Mi.com வழியாக விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் இந்த போன் கிடைப்பது இதுவே முதல் முறை. முதல் விற்பனை முடிந்ததும், அடுத்த Redmi 8A விற்பனை மதியம் 2 மணிக்கு வரும் என்று ஜியோமி இந்தியா அறிவித்தது. Redmi 8A வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி, Snapdragon 439 SoC, 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 3 ஜிபி ரேம் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இந்தியாவில் Redmi 8A-வின் விலை
இந்தியாவில் ரெட்மி 8A விலை, 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 6,499 ரூபாயும், 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 6,999 ஆகவும் இருக்கிறது. இது மிட்நைட் பிளாக், ஓஷன் ப்ளூ மற்றும் சன்ஷேடு ரெட் ஆகியவற்றில் வருகிறது.
குறிப்பிட்டுள்ளபடி, Redmi 8A-வை இன்று மதியம் 2 மணிக்கு Flipkart மற்றும் Mi.com வழியாக ஆர்டர் செய்யலாம். அதன் முதல் விற்பனை அதிகாலை 12 மணிக்கு (நள்ளிரவு) தொடங்கும். மேலும், இந்த நிறுவனம் செப்டம்பர் 30 முதல் தனது Mi Home stores வழியாக ஸ்மார்ட்போன்களின் விற்பனையை தொடங்கும்.
சலுகைகளைப் பொறுத்தவரை, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டை, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு ஆகியவற்றில் 5 சதவீத உடனடி தள்ளுபடி அல்லது கேஷ்பேக்கை வழங்குகிறது.
Redmi 8A-வின் விவரக்குறிப்புகள்
டூயல் சிம் (நானோ) ரெட்மி 8 ஏ ஆண்ட்ராய்டு 9 பை ஐ MIUI 10 உடன் இயக்குகிறது. மேலும், 6.22 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே 19: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், ரெட்மி 7A ஐ இயக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC ஐ தொலைபேசி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 3 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.
கேமரா பிரிவைப் பொறுத்தவரை, Redmi 8A, 12-megapixel Sony IMX363 சென்சார் பின்புறத்தில் எஃப் / 1.8 லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.
ரெட்மி 8A, 32 ஜிபி ஸ்டோரஜை கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C, மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.
கடைசியாக, Redmi 8A, 5,000 mAh லி-பாலிமர் பேட்டரியை 18W வேகமான சார்ஜிங் செய்கிறது. Redmi 8A-னுடன் பெட்டியில் 10W சார்ஜர் சேர்த்து அனுப்பப்படும் என்று ஜியோமி கூறியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்