வரவிருக்கும் ரியல்மி டிவியைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை.
ரியல்மி இந்த ஆண்டு தனது முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மி, போன்கள், ஆடியோ தயாரிப்புகளை அடுத்து, அதன் முதல் ஸ்மார்ட் டிவியை இந்த ஆண்டு பிற்பகுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. வரவிருக்கும் ரியல்மி டிவியை 43-இன்ச் திரை அளவில் வழங்கும் என்று ஒரு சான்றிதழ் வலைத்தளத்தின் பட்டியல் தெரிவிக்கிறது. மற்ற திரை அளவுகளும் இருக்கலாம்.
Realme TV-யின் அடிப்படை வேரியண்ட் 43-இன்ச் திரையும், அதன் டாப்-எண்ட் வேரியண்டில் 55-இன்ச் திரையும் இருக்கும் என்று பட்டியலில் உள்ள மாதிரி எண் JSC55LSQL தெரிவிக்கிறது.
இந்தியாவில் ரியல்மி டிவியின் காலவரிசை, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படலாம். இப்போது டிவி பற்றி எந்த விவரக்குறிப்புகளும் தெரியவில்லை. ஆனால், டிவியில் எச்டிஆருக்கான ஆதரவுடன் அல்ட்ரா-எச்டி மாதிரிகள் இடம்பெறும். அவை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு டிவி / தனிப்பயன் பயனர் இடைமுகத்தில் இயங்கும் ஸ்மார்ட் டிவியாகவும் இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month