இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் நியோவின் விலை ரூ.2,999 ஆகும்.
ரியல்மி பட்ஸ் ஏர் நியோ மூன்று தனித்துவமான வண்ணங்களில் வருகிறது
ரியல்மி பட்ஸ் ஏர் நியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி பட்ஸ் ஏர் நியோ இயர்போன்களின் வடிவமைப்பு ஏர்போட்களைப் போன்றது. அதே நேரத்தில், ரியல்மி பட்ஸ் ஏர் நியோவை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஸ் ஏருடன் ஒப்பிடும்போது பல மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் நியோவின் விலை ரூ.2,999 ஆகும். இது வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும். இதன் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் நடத்தப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் விரைவில் ஆஃப்லைனில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Realme Buds Air நியோ ஆர் 1 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இது ரியல்மி பட்ஸ் ஏரின் ஒரு பகுதியாகும். இந்த சிப்செட் வயர்லெஸ் ஆடியோ அனுபவத்துடன் குறைந்த லேட்டன்சி மோடில் 119.2 எம்.எஸ் ஆக இருக்கும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பட்ஸ்களின் லேட்டன்சி வீதம் 243.8 எம்.எஸ் ஆகும். இது கேமிங் மோடில் 119.3 எம்.எஸ் ஆக குறைகிறது.
ரியல்மி பட்ஸ் ஏர் நியோ, 13 மிமீ டிரைவர் எல்சிபி மல்டி லேயரைக் கொண்டுள்ளது. பட்ஸ் ஏர் நியோ இன்ஹேஸ் பேஸ் அனுபவத்திற்கு டைனமிக் பேஸ் பூஸ்ட் தீர்வு வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 இணைப்புடன் வருகிறது. கூகுள் ஃபாஸ்ட் பேயர் புரோட்டோகால் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், இயர்பட்ஸ் கேஸ் கவர் திறந்தவுடன் தானாகவே இணைந்து செயல்படுத்துகிறது.
இந்த இயர்பட்ஸ் டச் கண்ட்ரோலுடன் வருகிறது. இதன் பொருள் இயர்பட்ஸில் இருமுறை டேப் செய்தால் இசையை இயக்கவும் இடைநிறுத்தவும் செய்கிறது. டிரிபிள் டேப் செய்தால் அடுத்த பாடலுக்கு சென்ல்லும். மேலும், இந்த இயர்பட்ஸில் சத்தம் ரத்து செய்ய மைக்ரோஃபோன்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இயர்பட்ஸ் ஒரே சார்ஜில் தொடர்ச்சியாக மூன்று மணிநேர பிளேபேக்கைக் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சார்ஜிங் கேஸில் 17 மணிநேர ப்ளேபேக் பேட்டரி ஆயுள் கிடைக்கிறது. கேஸ் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளது. இதற்கு மாறாக, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன் ரியல்மி பட்ஸ் ஏர் வந்தது. ரியல்மி பட்ஸ் ஏர் நியோவின் ஒவ்வொரு பட்ஸும் 4.1 கிராம் எடையும், சார்ஜிங் கேஸ் 30.5 கிராம் எடையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces