ரியல்மி பட்ஸ் 3 புதுவிதமான, தனித்துவமான சீரிஸாக இருக்கும் என்று சிஇஓ மாதவ் செத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் வருவதற்கு முன்பாக ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் வந்துவிடும்
ரியல்மி தரப்பில் பட்ஸ் 3 இம்மாதம் அறிமுகம் செய்யப்படுவதாகவும், அதோடு ரியல்மி லேப்டாப்பும் அறிமுகமாகலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு அறிமுகம் செய்த வயர்ட் இயர்ட் பட்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ரியல்மி நிறுவனம், பட்ஸ் தயாரித்து வருவதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில், ரியல்மி நிறுவனத்தின் சிஇஓ மாதவ் செத் ஒரு வீடியோவில் பேசினார். அப்போது அவர் ரியல்மி, இந்த மாதம் இயர்பட்ஸ் 3 அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ரியல்மியின் பட்ஸ் 3 புதுவிதமாகவும், தனித்துவம் பெற்றதாகவும் இருக்கும் என்று கூறிய அவர், ரியல்மி லேப்டாப் கொண்டு வருவது குறித்து கவனத்தில் வைத்திருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ரெட்மி, ஹானர் நிறுவனங்கள் இந்தாண்டு லேப்டாப் தயாரிப்பிலும் இறங்கவிட்டன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ரியல்மி, ரெட்மி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், ரெட்மி லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அதற்கு இணையாக ரியல்மியும் லேப்டாப் அறிமுகம் செய்யும் என்று வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கணித்திருந்தனர்.
தற்போது அந்தக் கணிப்பு நனவாகும் வகையில், ரியல்மியின் சிஇஓ, லேப்டாப் குறித்து கவனத்தில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி கூறுகையில், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் வருவதற்கு முன்பாக நிச்சயம் ரியல்மி தரப்பில் 5ஜி ஸ்மார்ட்போன் வந்துவிடும் என்றார். இதே போல் ஸ்மார்ட்வாட்சிலும் ரியல்மி நிறுவனம் காலூன்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.
Last month, Sheth teased a “big announcement” taking place at IFA 2020 in September. It could be the venue where the company is likely to showcase its new offerings ahead of their arrival in India and global markets.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z Flip 8 to Reportedly Miss Out on Major Camera Upgrades; Specifications Leak
Apple's iOS 26.3 Beta 2 Update Hints at End-to-End Encryption Support for RCS Messaging: Report