OnePlus 8-ன் வடிவமைப்பானது hole-punch டிஸ்பிளே மூலம் முன்பக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது.
Photo Credit: Cashkaro/ OnLeaks
wireless charging அம்சத்துடன் வருகிறது OnePlus 8
2020 முதல் பாதியில் OnePlus 8 அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம். OnePlus 7T அறிமுகமாகி ஒரு வாரம்தான் ஆகிறது. இப்போது, OnePlus 8 ரெண்டர்கள், ஸ்மார்ட்போனின் முழு வடிவமைப்பும் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. OnePlus 8-ன் வடிவமைப்பானது hole-punch டிஸ்பிளே மூலம் முன்பக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. இதன் பொருள் செல்பி கேமரா டிஸ்பிளேவின் ஒரு மூலையில் அமைந்துள்ளது. முந்தைய OnePlus போனில் உள்ளது போலவே waterdrop notch அல்லது pop-up selfie camera காணப்படுகிறது. அதனுடன், பரிமாணங்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் இருப்பது போன்ற சில விவரக்குறிப்புகளையும் அறிக்கையில் கூறுகிறது.
பின்புறத்தில், இந்த OnePlus 8-ல் vertical triple camera அமைப்பை வழங்குகிறது.
OnePlus 8 வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிப்பது, இந்த சாதனத்தில் வரவேற்கத்தக்கது என்று CashKaro கூறுகிறது. தோராயமாக 6.5-inches எனக் கூறப்படும் தோராயமான டிஸ்பிளே அளவு அடங்கும். இந்த தொலைபேசி சுமார் 160.2x72.9x8.1mm (9.3mm including rear camera bump) அளவிடும் என்றும் கூறப்படுகிறது.
OnePlus 8, in-display fingerprint scanner-ஐக் கொண்டுள்ளது. மீதமுள்ள வடிவமைப்பு கோடுகள் ஒன்பிளஸ் வடிவமைப்பு பானியில் உள்ளன. சாதனத்தின் internal hardware பற்றி எந்த தகவலும் இல்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் 90Hz display-வுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். OnePlus தனது எதிர்கால தொலைபேசிகள் அனைத்தும் Fluid display தொழில்நுட்பத்துடன் வரும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த வரவிருக்கும் சாதனத்தின் கூடுதல் கசிவுகளை அறிய கேஜெட்டுகள் 360 உடன் இணைந்திருங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Motorola Smartphones in India Now Support PhonePe's Indus Appstore
Circle to Search Update Adds Spam Detection; Google Brings Urgent Call Notes, New Emoji to Android