அக்டோபர் 10 ஆம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கும் நிகழ்வில், OnePlus 7T Pro அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: OnLeaks / iGeeksBlog
தொலைபேசியைப் பொறுத்தவரை, OnePlus 7 Pro-வின் வடிவமைப்புக்கு இணையாக OnePlus 7T Pro வடிவமைக்கப்பட்டுள்ளது.
OnePlus கடந்த மாதம் ஒரு நிகழ்வில் OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro மிட்-சைக்கிள் புதுப்பிப்பை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு இரண்டு பிரீமியம் டிவிகளுடன் OnePlus 7T மட்டுமே கிடைத்தது. ஆனால் OnePlus 7T Pro-வில் எதுவும் இல்லை. அக்டோபர் 10 ஆம் தேதி லண்டனில் நடைபெறும் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் OnePlus 7T Pro அறிமுகப்படுத்தப்படும் என்பது தற்போதைய யூகமாக உள்ளது. OnePlus-ன் OnePlus 7T Pro-வின் வெளியீட்டு தேதியில் பெரிதும் கசிந்தது என்றாலும், எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கான வங்கி சலுகையில் OnePlus 7T Pro அக்டோபர் 15 முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
கூடுதலாக, அமேசான் வழியாக OnePlus 7T Pro-வின் முதல் விற்பனை அக்டோபர் 15 என்று தற்காலிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சலுகைகளைப் பொறுத்தவரை, எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைதாரர்களுக்கு அனைத்து தளங்களிலும் OnePlus 7T Pro-வில் ரூ. 3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, எச்.டி.எஃப்.சி வங்கி வழங்கிய கார்ப்பரேட் மற்றும் வணிக அட்டைகளில் இந்த சலுகை செல்லுபடியாகாது. தனித்தனியாக, OnePlus இந்தியா வலைத்தளம், OnePlus கடைகள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
| Products | One Plus 7 Pro | One Plus 7T | One Plus 7T Pro | One Plus TV | Offer Period for Respective Channels |
|---|---|---|---|---|---|
| Instant Discount Offer | 2000 | 1500 | 3000 | 4000/5000 | |
| Amazon -Sale Go Live Date | 5th Oct 2019 | 5th Oct 2019 | Tentative 15th Oct 2019 | 5th Oct 2019 | 5th Oct -11th Oct 18th Oct - 20th Oct 26th Oct 2019- 4th Jan 2020 |
| OnePlus.in - Sale Go Live Date | 27th Sept 2019 | 27th Sept 2019 | Tentative 10th Oct 2019 | NA | 27th Sept 2019 - 4th Jan 2020 |
| Offline (OP Exclusive Stores)- Sale Go Live date | 27th Sept 2019 | 27th Sept 2019 | Tentative 10th Oct 2019 | NA | 27th Sept 2019 - 4th Jan 2020 |
| Offline Distribution (Croma/RelianceDigital /Vijay Sales/Bajaj Electronics /Poojara Telecom /Top 10 Mobiles) | 28th Sept 2019 | 4th Oct 2019 | Tentative 10th Oct 2019 | NA | 28th Sept 2019 - 4th Jan 2020 |
மேலும்,One Plus 7T Pro-வில் ரூ. 3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதே போல் மற்ற OnePlus தொலைபேசிகள் மற்றும் OnePlus டிவி ஆகியவை குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே தள்ளுபடியில் கிடைக்கும்.
தொலைபேசியைப் பொறுத்தவரை, OnePlus 7 Pro-வின் வடிவமைப்புக்கு இணையாக OnePlus 7T Pro வடிவமைக்கப்பட்டுள்ளது. Snapdragon 855+ SoC-யிலிருந்து சக்தியை ஈர்ப்பதோடு, Warp Charge 30T-ஐ ஆதரிக்கும் 4,080mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கும் நிகழ்வில், OnePlus 7T Pro அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung's One UI 8.5 Beta Update Rolls Out to Galaxy S25 Series in Multiple Regions
Elon Musk Says Grok 4.20 AI Model Could Be Released in a Month
Xiaomi 17 Global Variant Listed on Geekbench, Tipped to Launch in India by February 2026
James Gunn's Superman to Release on JioHotstar on December 11: What You Need to Know