Mi.com, Flipkart, Amazon மற்றும் offline stores உள்ளிட்ட அனைத்து சேனல்களிலும் 5,00,000 தொலைக்காட்சிகளை ஜியோமி விற்பனை செய்துள்ளது
Mi TV 4X 50 ஜியோமியின் புதிய அறிமுகமாகும்
இந்தியாவில், தொலைக்காட்சி சந்தையில், ஜியோமி இப்போது இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் இதுவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய எண்கள் அந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஏனெனில் ஜியோமி அனைத்து சேனல்களிலும் சமீபத்திய பண்டிகை விற்பனையின் போது 5,00,000 Mi TV-களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. தவிர, இதே காலகட்டத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில், அதிகம் விற்பனையான தொலைக்காட்சி பிராண்ட் இது என்று நிறுவனம் கூறுகிறது.
செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி 24 நாட்களில், Mi.com, Flipkart, Amazon மற்றும் offline stores உள்ளிட்ட அனைத்து சேனல்களிலும் 5,00,000 தொலைக்காட்சிகளை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. "ஒரு மாதத்திற்குள் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிராண்ட் என்று நாங்கள் நம்புகிறோம், எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்ற அனைத்து அன்பையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியும், தாழ்மையும் அடைகிறோம்" என்று ஈஸ்வர் நிலகாந்தன் (Eshwar Nilakantan) கூறினார்.
Xiaomi Mi TV range அதன் விலை மற்றும் அம்சங்களுக்காக பிரபலமானது. இந்தியாவில், Mi TV 4C Pro (32)-க்கு நிறுவனத்தின் தயாரிப்பு வரம்பின் ஆரம்ப விலை ரூ. 11,499-யாகவும், Mi TV 4X 65-ன் விலை ரூ. 54,999 வரை செல்லும்.
இந்தியாவில் Mi TV 4X range-ஐ ஜியோமி சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த சிரீளில் மேலே குறிப்பிடப்பட்ட 50-inch மற்றும் 43-inch வேரியண்ட் ஆகியவற்றுடன் 65-inch வேரியண்டும் அடங்கும். 10-bit HDR content ஆதரவுடன் 4K smart TVs அனைத்து Mi TV 4X வேரியண்டுகளும் அடங்கும். தொலைக்காட்சிகள் முதன்மையாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. ஆனால், ஜியோமி ஆஃப்லைன் இருப்பிடங்களின் வளர்ந்து வரும் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. அங்கு பயனர்கள் நேரடியாக demo மற்றும் Mi TV-களை வாங்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series