ஜியோமி, சீனாவில் புதிய Mi Notebook Pro 15 Enhanced Edition-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Mi Notebook Pro (2019) மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதில் temperature management-டிற்கு dual fan அமைப்பு, 1080p full-HD டிஸ்பிளே, 1TB வரை ஸ்டோரேஜ் விருப்பம் மற்றும் Windows 10 operating system ஆகியவற்றுடன் வருகிறது. புதிய Mi Notebook Pro 15, நவம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
Mi Notebook Pro 15 Enhanced Edition, i7/16GB/1TB பதிப்பிற்கு சீனாவில் CNY 6,999 (சுமார் ரூ. 70,100)-க்கு சில்லரை விற்பனை செய்யும் என்று ஜியோமி கூறுகிறது. மடிக்கணினி முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது, இது நவம்பர் 1 முதல் விற்பனைக்கு வரும். metal body மற்றும் dark grey finish அம்சத்துடன், temperature management-டிற்கு heat pipes மற்றும் dual fans ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Mi Notebook Pro 15 Enhanced Edition-ன் விவரக்குறிப்புகள்:
Mi Notebook Pro 15 Enhanced Edition, 15.6-inch full-HD (1080p) டிஸ்பிளேவுடன் 100% sRGB high colour gamut உடன் வருகிறது. 16GB RAM, Nvidia GeForce MX250 GPU மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டு, 10th Generation Intel Core i7-10510U SoC-யால் இயக்கப்படுகிறது.
19.5 மிமீ பெரிய விசைகளை தட்டச்சு செய்வதற்கு எளிதாக, 60Wh பேட்டரி மற்றும் முழு அளவிலான backlit keyboard ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. போர்டில் 720p video call ஆதரவுடன் 1-megapixel கேமரா மற்றும் HDMI, USB Type-C Port, 3.5mm audio jack கொண்டது. மடிக்கணினி, சுமார் 2 கிலோ எடை மற்றும் 16.9mm தடிமன் கொண்டது.
முன்னர் குறிப்பிட்டபடி, Mi Notebook Pro 15 Enhanced Edition இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi Notebook Pro 15-யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். வேறுபாடுகளில், புதிய லேப்டாப்பில் மேம்படுத்தப்பட்ட செயலிகள், அதிக SSD ஸ்டோரேஜ் மற்றும் புதிய ஒலி கார்டு ஆகியவை உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்