HDR OLED TV, 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.
ஹவாய் புதிய 65 இன்ச் OLED டிவி, இப்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஹவாய், இப்போது Huawei Smart Screen X65-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei Smart Screen V75-க்குப் பிறகு ஹவாய் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய டிவி இதுவாகும். மேலும், டிவி பற்றிய முழு விவரங்களையும் இங்கே படிக்கவும்.
ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65-யின் விலை சிஎன்ஒய் 24,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,70,000)-யாகும்.
![]()
ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65 என்பது, எச்டிஆர் 10 தரத்திற்கான ஆதரவுடன் 65 அங்குல ஓஎல்இடி டிவி ஆகும். டிவியின் அதிகபட்ச பிரகாசம் 1,000 நைட்ஸ், புதுப்பிப்பு வீதம் 120Hz மற்றும் கண் ஆரோக்கியத்திற்காக டி.யூ.வி ரைன்லேண்டால் காட்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிவியில், 14-ஸ்பீக்கர் அண்டர்-டிஸ்பிளே ஒலி அமைப்பு உள்ளது. இதில் ஆறு முழு-ரேஞ் இயக்கிகள், அதிகபட்சம் ஆறு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு வூஃப்பர்கள் உள்ளன.
டிவி ஹவாய் நிறுவனத்தின் HarmonyOS-ல் இயங்குகிறது. இந்த டிவி ஓஎல்இடி டி.வி.களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Honghu 898 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் எக்ஸ் 65-யில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த டிவியில் 24 மெகாபிக்சல் பாப்-அப் கேமரா உள்ளது. இதன் மூலம் வீடியோ கால் மற்றும் பிற கேமரா செயலிகளை பயன்படுத்தலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Hollow Knight: Silksong Voted Game of the Year at 2025 Steam Awards: Full List of Winners
Redmi Turbo 5 Max Confirmed to Launch This Month; Company Teases Price Range