Hole-Punch Display-வைக் கொண்ட Huawei!

இது Kirin 710 octa-core SoC-யால் இயக்கப்படுகிறது.

Hole-Punch Display-வைக் கொண்ட Huawei!

Photo Credit: TENAA

வரவிருக்கும் Huawei போனில் HD display உள்ளது

ஹைலைட்ஸ்
  • தொலைபேசி 48 மெகாபிக்சல் கேமரா என்று பட்டியலிடப்பட்டுள்ளது
  • முன் கேமரா 8 மெகாபிக்சல்களில் இருக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது
  • TENAA புகைப்படம் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் இல்லை என்பதைக் காட்டுகிறது
விளம்பரம்

புதிய Huawei தொலைபேசி ஒரு Hole-Punch Display, முன் மற்றும் பின்புற இரட்டை கேமராக்களைக் கொண்டுள்ளது. Hole-Punch Display-வுடன் வெளிவந்த முதல் தொலைபேசி கடந்த டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட நோவா 4 ஆகும். நோவா 5i பின்னர் Hole-Punch Display-வுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த புதிய தொலைபேசி அதே முன் கேமரா பிளேஸ்மென்ட்டுடன் வருகிறது. இதில் வரவிருக்கும் மாறுபாடு நோவா தொடரின் ஒரு பகுதியா? அல்லது முற்றிலும் புதியதா? என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

Huawei-யிலிருந்து புதிய தொலைபேசி TENAA-ல் மாதிரி எண் ART-TL00x உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு Hole-Punch Display முன், மற்றும் டிஸ்ப்ளேவின் கீழே ஒரு சிறிய வித்தியாசம் ஆகியவற்றைக் காணலாம். இது மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள இரட்டை பின்புற கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற பேனல் ஒரு gradient finish-ஐக் கொண்டது. 

ஹவாய் தொலைபேசியில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் பவர் பட்டன் வலது விளிம்பில் அமர்ந்துள்ளன. இடது விளிம்பில் சிம் கார்டு போடும் இடம் உள்ளது. தொலைபேசி பின்புற கைரேகை சென்சார் பொருத்தவில்லை. இது நோவா 5 தொடரின் மாறுபாடாக மட்டுமே இருக்க முடியும். 

எப்படியிருந்தாலும், TENAA பட்டியல் தொலைபேசியைப் பற்றிய சில முக்கியமான விவரங்களையும் தருகிறது. இது 6.39-inch HD (720x1560 pixels) display பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இது Kirin 710 octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. இது இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருவதோடு, ஒரு 48 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் இரண்டாம் நிலை y8- மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டது. செல்பி கேமராவைப் பொறுத்தவரை, தொலைபேசியில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. 

இறுதியாக, வரவிருக்கும் ஹவாய் தொலைபேசி 3,900mAh பேட்டரியை பேக் செய்யக்கூடும் என்றும் பட்டியல் தெரிவிக்கிறது. TENAA பட்டியலை முதலில் Playful Droid-ஐக் கண்டறிந்தது. இந்த தொலைபேசி சமீபத்தில் தொடங்கப்பட்ட Honor Play 3  உடன் மிகவும் இணையானதாக இருக்கிறது. ஆனால், இது பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் Play 3 மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »