வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், தங்களுக்கு சரிபாதி உரிமையுள்ள விற்பனையாளர்கள்மிடருந்து பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் விற்பனையின் ஜாம்பவான்களான ஆமேசான் மற்றும் வால்மார்டு நிறுவனத்தின் ஃவிளிப்கார்டு நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசு தரப்பில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பில் , இந்த புதிய விதி வரும் பிப்ரவரி மாதம் அமலுக்கு வரவுள்ளது.
‘இ- வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், அவர்களுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்தோ அல்லது அதன் அசார்பு நிறுவனங்களிடமிருந்தோ மட்டுமே பொருட்களை விற்பணை செய்ய தடை விதிக்கப்கட்டுள்ளது. மேலும் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்கி விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இதன் மூலம் விற்பனையாளர்கள் மக்களை நேரடியாக சென்றடைய முடியும். மேலும் குறைந்த விலை மற்றும் தள்ளுபடிகள் மூலம் அதிகபடியான விற்பனையில் ஈடுபட முடியும் என எதிர்பாக்கப்படுகிறது' என வர்தக அமைசரகம் அறிவித்துள்ளது..
இது போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதிக்கதால் தங்களது விற்பனைகள் தொடர்ந்து பாதித்து வருவதாக இந்திய விற்பனையாளர்களின் தொடர் புகார்களால் இந்த புதிய விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் அகில இந்திய இணையவழி விற்பனையாளர்கள் அசோசியோஷன் All India Online Vendors Association (AIOVA) பிப்ரவரி மாதம் சார்பாக கடந்த அக்டோபர் மாதம், அமேசான் நிறுவனம் க்ளாவுட் டெயில் மற்றும் அபாரியோ போன்ற நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வளங்குவதாக கொடுக்கப்பட்ட மனுவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.மேலும் இதேபோன்ற வழக்கு லாபி குழுவால் ஃபிள்ப்கார்டு நிறுவனத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ளது .
மேலும் இந்த புதிய விதிமுறையின் மூலம் யூ.எஸ் நாட்டை சேர்ந்த நிறுவனங்களை கண்டு இந்திய வியாபாரிகள் அஞ்ச வேண்டாம் என நம்பப்படுகிறது. மேலும் இதன் மூலம் பொருட்களின் விலையை கட்டுபடுத்த முடியும் என எதிர்பாக்கபடுகிறது.
இந்த புதிய விதிமுறைகளை அமல் படுத்துவது குறித்து அமேசான் நிறுவனம் ஆலோசனை நடத்திவரும் நிலையில் ஃப்ள்ப்கார்டு சார்பில் இன்னும் பதில்வரவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்