3.2 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்! 

விளம்பரம்
Written by Associated Press மேம்படுத்தப்பட்டது: 14 நவம்பர் 2019 11:43 IST

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 3.2 பில்லியன் போலி கணக்குகளை (Fake Accounts) தனது சேவையிலிருந்து நீக்கியதாக பேஸ்புக் (Facebook) கூறுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களில் 3 பில்லியனில் இருந்து சற்று அதிகரித்துள்ளது.

சமூக வலைதளத்தில் "active" பயனர்களாக மாறுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பே கிட்டத்தட்ட அனைத்து போலி கணக்குகளும் பிடிபட்டன. எனவே, நிறுவனம், தவறாமல் அறிக்கையிடும் பயனர் புள்ளிவிவரங்களில் அவை கணக்கிடப்படவில்லை. பேஸ்புக் அதன் 2.45 பில்லியன் பயனர் கணக்குகளில் சுமார் 5 சதவீதம் போலியானது என்று மதிப்பிடுகிறது.

புதன்கிழமை ஒரு அறிக்கையில், ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் 18.5 மில்லியன் child nudity மற்றும் sexual exploitation நிகழ்வுகளை அதன் முக்கிய தளத்திலிருந்து நீக்கியுள்ளத., இது முந்தைய ஆறு மாதங்களில் 13 மில்லியனாக இருந்தது. கண்டறிதலில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாக கூறுகிறது.

கூடுதலாக, பேஸ்புக் (Facebook) இந்த காலகட்டத்தில் 11.4 மில்லியன் நிகழ்வுகளை நீக்கியது. இது முந்தைய ஆறு மாதங்களில் 7.5 மில்லியனாக இருந்தது. வெறுக்கத்தக்க பேச்சை முன்கூட்டியே அகற்றத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. சில தீவிரவாத உள்ளடக்கம், child-exploitation மற்றும் பிற விஷயங்களுடன் செய்யும் முறையாகும்.

பேஸ்புக் (Facebook) பயங்கரவாத பிரச்சாரங்களை அகற்றுவது குறித்து பகிர்ந்து கொள்ளும் டேட்டாவை விரிவுபடுத்தியது. al-Qaida, ISIS மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே அதன் முந்தைய அறிக்கைகளில் இருந்தன. ISIS அல்லாதவர்கள் அல்லது al-Qaida தீவிரவாத குழுக்கள் பதிவிட்ட பொருள்களை அந்த இரண்டு அமைப்புகளை விட குறைந்த விகிதத்தில் பேஸ்புக் கண்டுபிடிப்பதாக சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.

தரநிலை அமலாக்கத்தில் பேஸ்புக்கின் (Facebook) நான்காவது அறிக்கை மற்றும் child nudity, illicit firearm மற்றும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயங்கரவாத பிரச்சாரம் போன்ற பகுதிகளில் இன்ஸ்டாகிராமிலிருந்து (Instagram) டேட்டாவை உள்ளடக்கிய முதல் அறிக்கை இது. இன்ஸ்டாகிராமில் (Instagram) இருந்து 1.3 மில்லியன் child nudity மற்றும் child sexual exploitation போன்ற சம்பவங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து மக்கள் அதை பார்ப்பதற்கு முன்பே பெரும்பகுதியை நீக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Instagram
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra வாங்க இதுதான் சரியான நேரம்! Flipkart-ல் அதிரடி விலை குறைப்பு + பேங்க் ஆஃபர்ஸ்
  2. HMD-யிடமிருந்து பட்ஜெட் விலையில் செம்ம தரமான TWS ஆடியோ சீரிஸ்! எக்ஸ்50 ப்ரோ முதல் பி50 வரை... முழு விவரம் இதோ
  3. ஸ்மார்ட்வாட்ச் உலகிற்குப் புதிய ராஜா வர்றாரு! Xiaomi Watch 5-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ முழு விவரம்
  4. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ? Nord 4 இப்போ செம்ம மலிவான விலையில Amazon-ல் கிடைக்குது
  5. ஒப்போ ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Find X8 Pro விலையை ₹19,000 வரை குறைச்சிருக்காங்க. இந்த டீலை விடாதீங்க மக்களே
  6. எக்ஸினோஸ் 1480 சிப்செட்.. 120Hz சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே! சாம்சங் M56 5G இப்போ செம மலிவு
  7. வாட்ஸ்அப் சேனல் அட்மின்களுக்கு குட் நியூஸ்! இனி உங்க ஃபாலோயர்களுக்கு வினாடி வினா வைக்கலாம்
  8. பட்ஜெட் விலையில் ஒரு மினி தியேட்டர்! 4 ஸ்பீக்கர்ஸ்.. 2.5K டிஸ்ப்ளே!
  9. 2nm சிப்செட்.. ஆனா 'இன்டகிரேட்டட் மோடம்' இல்லையா? சாம்சங் S26-ல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுமா?
  10. Zeiss கேமரா.. Dimensity 9400 சிப்செட்! விவோ X200 விலையில் செம சரிவு! அமேசான்ல இப்போ செக் பண்ணுங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.