வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் திரையிலேயே Facebook மற்றும் Instagram-க்கு தனித்தனி பட்டன்கள் கொடுக்கப்படும்
சமீப காலமாக, வாட்ஸ்அப் தனது செயலியில் பல முக்கியமான மாற்றங்களையும், புதிய வசதிகளையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், இப்போது ஒரு பெரிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. அதாவது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை (Status Updates) Facebook மற்றும் Instagram-ல் மிகவும் விரைவாகப் பகிர (Quick Sharing) ஒரு புதிய Feature கொண்டு வரப்படவுள்ளது. Instagram ஸ்டோரீஸ் போன்ற வடிவமைப்பிற்கு மாறியிருக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில், இந்த புதிய வசதி இன்னும் எளிமையாகச் செயல்பட உள்ளது.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp) ஆகிய தளங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த New Feature அறிமுகமாகிறது.
சமீபத்திய iOS Beta பதிப்பான 25.28.10.72-ல் (இது Android-லும் விரைவில் வரும்) இந்த வசதி கண்டறியப்பட்டுள்ளது.
இந்த Quick Share பட்டன்களுடன் சேர்ந்து, ஸ்டேட்டஸ் திரையின் வடிவமும் (Interface) மாற்றியமைக்கப்பட இருக்கிறது. இனி ஸ்டேட்டஸின் View Count திரையின் இடது பக்கம் செல்ல, இந்த Quick-Share Buttons வலது பக்கம் இடம்பெறுகிறது. இது பார்ப்பதற்கு Instagram-ன் ஸ்டோரீஸ் வடிவமைப்பை ஒத்திருக்கும்.
இந்த வசதியைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மெட்டாவின் Accounts Center உடன் இணைக்க வேண்டியிருக்கலாம். இது, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே மையத்தில் (Centralized Hub) நிர்வகிக்க உதவும். எனினும், Accounts Center-ல் இணைவது என்பது முழுவதுமாகப் பயனரின் விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் விரும்பினால் மட்டுமே இணைக்கலாம்.
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு (Privacy Assurance),இந்த ஒருங்கிணைப்பு இருந்தாலும், உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் அழைப்புகள் எதுவும் பாதிக்கப்படாது. வாட்ஸ்அப்பின் முக்கியமான End-to-End Encryption பாதுகாப்பு எப்போதும் போலத் தொடரும் என மெட்டா உறுதி அளித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்