காரில் Amazon-ன் Alexa voice assistant -க்கான அணுகலை செயல்படுத்துகிறது.
Amazon Echo Auto, கார் அணுகலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது
மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இப்போது வேகமாக பிரபலமடைந்து வருவதால், அமேசான் தனது சமீபத்திய Echo தயாரிப்பான Amazon Echo Auto-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 4.999 ஆகும். இந்த சாதனம் in-car பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், காரில் Amazon-ன் Alexa voice assistant -க்கான அணுகலை செயல்படுத்துகிறது. பயனர்கள் எந்த Alexa-linked ஸ்ட்ரீமிங் சேவைகளிலிருந்தும் இசையை ஸ்ட்ரீம் செய்ய முடியும். அத்துடன் அலெக்ஸாவிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் தகவல்களைக் பெறலாம்.
Amazon Echo Auto இப்போது முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இது ஜனவரி 15 முதல் அனுப்பப்படும். இந்த சாதனம் பொதுவாக பெரும்பாலான கார்களில் காணப்படும் 12V மின் சாக்கெட்டுடன் இணைகிறது. மேலும், இணைப்புக்காக உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியை நம்பியுள்ளது. ‘Alexa' விழித்தெழும் வார்த்தையைக் கேட்க இந்த சாதனம் எட்டு மைக்ரோஃபோன்களைக் கொண்டுள்ளது. மேலும், streaming music, audiobooks, அடையாளங்கள் மற்றும் ஆர்வமுள்ள புள்ளிகள், Alexa Skills மற்றும் பலவற்றிற்கான அணுகலை வழங்குகிறது.
சாதனத்தில் ஸ்பீக்கர் இல்லை, அதற்கு பதிலாக 3.5mm கேபிள் அல்லது ஆடியோவுக்கான புளூடூத் பயன்படுத்தி உங்கள் கார் ஸ்டீரியோ சிஸ்டத்துடன் இணைகிறது. Echo Auto-வில் இரண்டு பொத்தான்கள் உள்ளன - action பொத்தான் மற்றும் microphone mute பொத்தான் - மற்றும் முன்புறத்தில் indicator light உள்ளன. இந்த சாதனம் MediaTek MT7697 processor மூலம் இயக்கப்படுகிறது. மேலும், உங்கள் ஸ்மார்ட்போனுக்கு hands-free voice-controlled அணுகலுக்காக சாதனத்தைப் பயன்படுத்தலாம் - Echo Auto-வைப் பயன்படுத்தி அழைப்புகள், செய்திகள் மற்றும் பல.
அமேசான் இப்போது இந்தியாவில் பரவலான Echo சாதனங்களைக் கொண்டுள்ளது. இதில் சமீபத்திய வெளியீடுகளான Echo Input Portable, Echo Flex மற்றும் Echo Studio ஆகியவை அடங்கும். Echo வரம்பில் மலிவு விலையில் இருந்து விலை உயர்ந்தது வரை விலையிடப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான சாதனங்கள் வீட்டிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Xbox Game Pass Wave 2 Lineup for January Announced: Death Stranding Director's Cut, Space Marine 2 and More
Best Laser Printers with Scanners That You Can Buy in India Right Now