Bluetooth SIG வலைத்தளத்தின் பட்டியல் Bluetooth v5.0 இணைப்புடன் இயர்பட்ஸ் வருவதாக காட்டுகிறது.
Mi True Wireless Earphones அல்லது Mi AirDots Pro 2 விரைவில் மேம்படுத்தலைப் பெற வாய்ப்புள்ளது
ஜியோமி தயாரிப்புகளில் ஒரு புதிய truly wireless earbuds-ஐக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நிறுவனம் இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், புதிய இயர்பட்ஸ் Bluetooth SIG இணையதளத்தில் மாதிரி எண் TWSEJ05WM உடன் வெளிவந்துள்ளன. Mi True Wireless Earphones 2S என்ற தயாரிப்பு பெயருடன் ஆன்லைனில் இயர்பட்ஸ் பட்டியலிடப்பட்டுள்ளன, இது சீனாவில் Mi AirDots Pro 2 எனக் கிடைக்கும் Mi True Wireless Earphones-க்கான மேம்படுத்தலாகத் தோன்றுகிறது. விருப்பமான வயர்லெஸ் சார்ஜிங்-ஆதரவு கேசுடன் வரும் Apple AirPods 2-ஐ எதிர்கொள்ள, ஜியோமி வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் புதிய இயர்பட்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.
புளூடூத் சான்றிதழ் இணையதளத்தில் கிடைக்கும் விவரங்களின்படி, ஜியோமியிலிருந்து வரும் Mi True Wireless Earphones 2S, Bluetooth v5.0 இணைப்புடன் வருகிறது. இயர்பட்ஸ் மாதிரி எண் TWSEJ05WM-ஐக் கொண்டுள்ளன, இது செப்டம்பர் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi AirDots Pro 2 அல்லது Mi True Wireless Earphone உடன் தொடர்புடைய மாதிரி எண்ணான TWSEJ02JY உடன் நெருக்கமாகத் தெரிகிறது.
ஆன்லைன் பட்டியல் Tiinlab.com.cn-ஐ தயாரிப்பு வலைத்தளமாகக் காட்டுகிறது. 1More பிராண்டின் கீழ் ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற ஆடியோ சாதனங்களை தயாரிக்கும் சீன ஒலியியல் உற்பத்தியாளர் டைன்லாப் (TiinLab) என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோமி தனது next-generation truly wireless earbuds-ஐ தயாரிப்பதற்காக ஷென்சென் சார்ந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இருக்கலாம்.
![]()
Xiaomi Mi Wireless Earphones 2S டிசம்பர் 12 முதல் Bluetooth SIG இணையதளத்தில் பட்டியலிடப்படுள்ளது
Photo Credit: Bluetooth SIG
Mi True Wireless Earphones 2S அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், Bluetooth SIG வலைத்தளத்தின் சான்றிதழ் பக்கம், டிசம்பர் 12 அன்று இயர்பட்ஸ் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. நிறுவனம் விரைவில் தங்கள் முறையான அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று அறிவுறுத்துகிறது.
Mi True Wireless Earphones 2S-ல் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை உள்ளடக்கியிருக்கலாம். மேலும், AirPods 2-ஐ எடுத்துக்கொள்வதற்கான புதிய வடிவமைப்பில் வரக்கூடும். மேலும், உள்நாட்டு போட்டியாளரும் அதன் முதல் truly wireless earbuds-ல் பணிபுரியும் நிலையில், ஜியோமி ரியல்மி விஷயங்களை கடினமாக்குகிறது. டிசம்பர் 17, செவ்வாயன்று இந்தியாவில் Realme Buds Air என அறிமுகம் செய்யவுள்ளது.
Mi True Wireless Earphones 2S-ன் ஆன்லைன் பட்டியலை GizmoChina கண்டுபிடித்தது. இருப்பினும், கேஜெட்ஸ் 360 அதன் இருப்பை சுயாதீனமாக சரிபார்க்க முடிந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features