இந்தியாவில் வெளியானது Samsung Galaxy Watch Active 2 4G வேரியண்ட்!

இந்தியாவில் வெளியானது Samsung Galaxy Watch Active 2 4G வேரியண்ட்!

Samsung Galaxy Watch Active 2 அக்டோபர் மாதம் இந்தியாவில் Wi-Fi only வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
 • Galaxy Watch Active 2 சமூக வலைதள செயலிக்கான அணுகலை வழங்குகிறது
 • சாம்சங், 39 செயல்பாடுகளைக் கண்காணிக்க சென்சார்களை வழங்கியுள்ளது
 • Galaxy Watch Active 2 4G வேரியண்ட் 44mm ஸ்டீல் டயலில் வருகிறது

Samsung Galaxy Watch Active 2 4G வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விலை ரூ. 35,990. பயனர்கள் தங்கள் போன்களை பயபடுத்தாமல், குரல் அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் இந்த Samsung Galaxy Watch Active 2 4G வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், silver, black மற்றும் gold finishe உடன் 44mm steel dial-ல் கிடைக்கிறது. சாம்சங் ஏற்கனவே Galaxy Watch Active 2 4G வேரியண்ட்டை ஆஃப்லைன் சேனல்களான Samsung Opera House, Samsung e-shop மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

அதன் Wi-Fi-only மாடலைப் போல் இல்லாமல், Samsung Galaxy Watch Active 2 4G வேரியண்ட் பயனர்களை இணைத்து வைத்திருக்கவும், ஸ்மார்ட்வாட்சிலிருந்து நேரடியாக அழைப்புகளை எடுக்கவோ அல்லது பெறவோ அனுமதிக்கும் வகையில் eSIM இணைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் போனின் அருகாமையில் இருக்க வேண்டிய அவசியமின்றி, சமூக வலைதள செயலிகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

நடைபயிற்சி (walking), ஓட்டம் (running), சைக்கிள் ஓட்டுதல் (cycling), ரோயிங் (rowing), நீள்வட்ட பயிற்சியாளர் (elliptical trainer), டைனமிக் உடற்பயிற்சிகள் (dynamic workouts) மற்றும் நீச்சல் (swimming) போன்ற பிரபலமான செயல்பாடுகளுக்கான ஆட்டோ டிராக்கிங்குடன் 39 தனித்துவமான செயல்பாடுகளைக் கண்காணிக்க, சாம்சங் சென்சார்களை வழங்கியுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் புதுப்பிக்கப்பட்ட ‘Running Coach' உடன் வருகிறது. இது ஏழு வெவ்வேறு இயங்கும் நிரல்களுக்கான அணுகலை வழங்குகிறது மற்றும் பயனர்கள் தங்கள் இயங்கும் வேகத்தை உண்மையான நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது. கூடுதலாக, Samsung Galaxy Active 2 4G தூக்கம் மற்றும் தியான செயலியான ‘Calm' ஒருங்கிணைப்பதன் மூலம் வழிகாட்டப்பட்ட தியான திட்டங்களுக்கான அணுகலை வழங்குகிறது. 

"Samsung Galaxy Watch Active 2 4G அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சாம்சங் இப்போது இந்தியாவில் 4 ஜி-இயக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களின் பரந்த அளவிலான 2 unique design templates, 3 sizes மற்றும் 6 colour finishes-ஐக் கொண்டுள்ளது. புதிய வடிவமைப்பு மொழி மற்றும் அனைத்து புதிய டிஜிட்டல் bezel UI ஆகியவை தடையற்ற 4G இணைப்பு மற்றும் செயல்பாட்டின் கலவையை விரும்புவோருக்கு இந்த வாட்ச் இன்றியமையாததாக ஆக்குகிறது ”என்று சாம்சங் இந்தியாவின் மொபைல் வர்த்தக இயக்குனர் ஆதித்யா பாபர் (Aditya Babbar) தயாரித்த அறிக்கையில் தெரிவித்தார்.

நினைவுகூர, Samsung Galaxy Watch Active 2 4G வேரியண்ட் அதன் Wi-Fi only மாடலுடன் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

 • Design and comfort
 • Tracking accuracy
 • Software and ecosystem
 • Battery life
 • Good
 • Crisp display
 • Good battery life
 • 4G connectivity
 • Swim-proof
 • Accurate sleep and heart rate tracking
 • Bad
 • Limited third-party app support
 • Slow charging
Display Size 34mm
Compatible OS Android, iOS
Strap Material Leather
Dial Shape Round
Display Type Super AMOLED
Ideal For Unisex
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com