Samsung நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வை நடத்தியது. இதில் அறிமுகமான Galaxy Watch 7, Watch Ultra மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்வாட்ச் என்று கூறுகிறது.
Samsung நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வை நடத்தியது. இதில் போல்டபில் போன்கள், ஆடியோ டிவைஸ்களை அறிமுகப்படுத்தியது. இதில் Galaxy Watch Ultra மற்றும் Galaxy Watch7 ஆகியவை அடங்கும்.
Galaxy Watch7 உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. இது 100க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி ஆப்களை கொண்டுள்ளது. வொர்க்அவுட் செய்ய தனி வசதிகள் இருக்கிறது. FDA மூலம் அங்கீகரிக்கப்பட்ட மூச்சுத்திணறல் கண்டறிதல், நிகழ்நேர இதய துடிப்பு கண்காணிப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு அறிவிப்பு (IHRN), எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயோஆக்டிவ் சென்சார் கொண்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தை கண்டறிய மேம்பட்ட கிளைகேஷன் எண்ட் வசதி உள்ளது.
Galaxy Watch7 மூன்று மடங்கு வேகமான CPU வேகத்தையும் 30% மேம்படுத்தப்பட்ட சக்தி செயல்திறனையும் வழங்குகிறது.
Galaxy Watch Ultra மேம்பட்ட உடல்நிலை கண்காணிப்பை தருகிறது. டைட்டானியம் கிரேடு 4 சட்டகம் இருப்பதால் 10ATM நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது. இது கடினமான சூழல்களுக்கு ஏற்றது. Galaxy Watch7ல் உள்ள அதே உடல்நிலை கண்காணிப்பு வசதிகளை கொண்டுள்ளது. கூடவே அவசர காலங்களில் எச்சரிக்கை செய்தி அனுப்பும் வசதியும் உள்ளது. Galaxy Watch Ultra மிக நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. 100 மணிநேரம் மற்றும் உடற்பயிற்சி பயன்பாட்டில் 48 மணிநேரம் இயங்ககூடியது. வெயிலின் போதும் தெளிவாக தெரியும் டிஸ்பிளே உள்ளது. Galaxy Watch7 மற்றும் Galaxy Watch Ultra இரண்டும் Wear OS 5 இல் இயங்குகின்றன. Galaxy Watch உடன் Galaxy Ring இணைப்பது பேட்டரி ஆயுளை 30% வரை நீட்டிக்கும்.
கேலக்ஸி வாட்ச்7 மற்றும் வாட்ச் அல்ட்ராவின் விலை
வாட்ச்7 40 மிமீ பிடி - ரூ. 29,999
வாட்ச்7 40 மிமீ எல்டிஇ - ரூ. 33,999
வாட்ச்7 44 மிமீ பிடி - ரூ. 32,999
வாட்ச்7 44 மிமீ எல்டிஇ - ரூ. 36,999
அல்ட்ரா 47மீ - ரூ. 59,999
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity