புதிய “tech lifestyle” தயாரிப்புகளை கொண்டு வருவதன் மூலம் பெரியதாக வளர Realme நோக்கம் கொண்டுள்ளது.
Realme, விரைவில் அதன் முதல் மாடலுடன் fitness bands சந்தையில் நுழையக்கூடும்
Realme smartwatch விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும். சீன நிறுவனம் அதன் புதிய வளர்ச்சியைப் பற்றி எந்தவொரு உறுதியான விவரங்களையும் வெளியிடவில்லை என்றாலும், ரியல்ம் பிராண்டிங்கைக் கொண்ட ஒரு ஸ்மார்ட்வாட்ச், பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (Bureau of Indian Standards - BIS)-ல் இருந்து சான்றிதழைப் பெற்றுள்ளது. இது நாட்டில் அதன் அறிமுகத்தை குறிக்கிறது. முன்னதாக வியாழக்கிழமையன்று, ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) ஒரு வீடியோ ஸ்ட்ரீம் மூலம் Realme 5i-ஐ அறிமுகப்படுத்தும்போது, ஜியோமியின் Mi Band-ற்கு இணையான வடிவமைப்பு இருப்பதாகத் தோன்றும் ஒரு உடற்பயிற்சி பேண்டில் ஒரு பார்வை கிடைத்தது. நிறுவனம் தனது புதிய அணியக்கூடியவை மூலம் ஜியோமியைப் பெற வாய்ப்புள்ளது.
BIS சான்றிதழ் தளத்தில் கூறப்படும் பட்டியல், மாதிரி எண் RMA183 உடன் ரியல்மி ஸ்மார்ட்வாட்சைக் காட்டுகிறது என்று IndiaShopps தெரிவித்துள்ளது. பட்டியலைக் காட்டும் ஒரு ஸ்கிரீன் ஷாட் ஜனவரி 6 அன்று, அணியக்கூடியது அதிகாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இது வரவிருக்கும் துவக்கத்தைக் குறிக்கிறது. ரியல்மி அதன் ஸ்மார்ட்வாட்சைச் பற்றி எந்த அதிகாரப்பூர்வ விவரங்களையும் வெளியிடவில்லை.
BIS பட்டியலை எங்களால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. மேலும், வளர்ச்சியைப் பற்றிய தெளிவுக்காக நாங்கள் ரியல்மியை அணுகியுள்ளோம், மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.
கடந்த நவம்பரில் இருந்து, Realme தனது “tech lifestyle” தயாரிப்புகளின் வருகையை மற்றொரு ஸ்மார்ட்போன் விற்பனையாளராக இருப்பதைத் தாண்டி, கிண்டல் செய்யத் தொடங்கியது. நிறுவனம் கடந்த மாதம் Realme Buds Air அதன் truly wireless earbuds-ஆக Apple AirPods-ஐப் பின்பற்றும் தோற்றம் மற்றும் அம்சங்களுடன் வெளியிட்டது.
ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth), நவம்பர் பிற்பகுதியில் கேஜெட்ஸ் 360 உடன் பேசியபோது, புதிய அணியக்கூடிய மற்றும் Internet of Things (IoT) சாதனங்களை கொண்டுவருவதற்கான நிறுவனத்தின் திட்டத்தை வலியுறுத்தினார். Realme 5i வெளியீட்டை வழங்கும் போது, ஒரு மஞ்சள் நிற சிலிகான் பேண்டை கொண்டிருக்கும் உடற்பயிற்சி பேண்டையும் ஷெத் வெளிப்படுத்தினார்.
கடந்த மாதம் ஒரு AskMadhav எபிசோடில், Realme fitness band, 2020 முதல் பாதியில் அறிமுகமாகும் என்பதை ஷெத் (Sheth) வெளிப்படுத்தினார். சமீபத்திய வெளிப்பாடு முழு அளவிலான ஸ்மார்ட்வாட்சுக்கு பதிலாக, அதே உடற்பயிற்சி பேண்டாக இருக்கலாம்.
IDC-யின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளாவிய அணியக்கூடிய சந்தை 2023-க்குள் கிட்டத்தட்ட 500 மில்லியன் யூனிட்களை (nearly 500 million unit) எட்டும். ஸ்மார்ட் வாட்ச்கள் 109.2 மில்லியன் ஏற்றுமதிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கைக்கடிகாரங்கள் 2023-ஆம் ஆண்டில் 69.7 மில்லியன் ஏற்றுமதி மைல்கல்லை எட்டும் என்று யூகிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த அணியக்கூடிய சந்தை ஐந்தாண்டு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (compound annual growth rate - CAGR) 22.4 சதவீதத்துடன் வளரும் என்று கருதப்படுகிறது.
இவை அனைத்தும் ரியல்மி அதன் அணியக்கூடியவற்றை சந்தைக்குக் கொண்டுவருவதன் மூலம் வளர்ச்சித் திறனைக் காட்டுகிறது. ஆயினும்கூட, அணியக்கூடிய பொருட்களின் சந்தையில், ஏற்கனவே Apple மற்றும் Samsung போன்றவை உள்ளன, அவை சில ஈர்ப்பைத் திருடுகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Airbnb Developing a Dedicated AI Agent for Travel Plans; Will Launch Next Year
iQOO's Next Z-Series Phone Could Pack a 7-Inch Screen, 10,000mAh Battery, Tipster Claims
Meta Launches Muse Voice Letting Users Have Real-Time Conversations With the AI Assistant