ரியல்மி பேண்ட் இன்று மூன்றாவது முறையாக அதிகாரப்பூர்வ ரியல்மி வலைத்தளம் மற்றும் அமேசான் வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். ஸ்மார்ட் பேண்டிற்கான முதல் ஃபிளாஷ் விற்பனை, வெளியான நாளான மார்ச் 5 அன்று நடந்தது, இரண்டாவதாக இந்த வாரம் மார்ச் 9 அன்று நடந்தது. ரியல்மி பேண்ட் கடந்த வாரம் அறிமுகமானது. இது கருப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று பட்டை கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
இந்தியாவில் Realme Band-ன் விலை ரூ.1,499 ஆகும். இது ரியல்மி வலைத்தளத்திலும், அமேசான் இந்தியாவிலும் மதியம் 12 மணிக்கு தொடங்கும். அமேசானில் உள்ள வாடிக்கையாளர்கள், அமேசான் பே மூலம் பணம் செலுத்துவதில் ரூ.50 கேஷ்பேக் மற்றும் ப்ரைம் உறுப்பினர்களுக்கான அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் ப்ரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு 3 சதவிகிதம் தள்ளுபடி ஆகியவற்றை பெறலாம்.
ஷாவ்மியின் Mi Band 4-ன் போட்டியாளராக ரியல்மி பேண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டருடன் வருகிறது. இது தவிர, 80x160 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட 0.96 இன்ச் (2.4 செ.மீ) கலர் டிஎஃப்டி டிஸ்பிளேவை நிறுவனம் வழங்கியுள்ளது. ஸ்மார்ட் பேண்ட் ஒரு செயலியின் மூலம் சரிசெய்யக்கூடிய ஐந்து நிலை பிரகாசத்தை ஆதரிக்கிறது.
Realme பேண்ட் ஐந்து டயல் முகங்களைக் கொண்டுள்ளது, அவை ரியல்மி இணைப்பு செயலியைப் பயன்படுத்தி மாற்றப்படலாம். எதிர்கால ஓவர்-தி-ஏர் (ஓடிஏ) புதுப்பிப்புகளுடன் கூடுதல் வாட்ச் முகங்களை நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த பேண்ட் நடைபயிற்சி, ஓட்டம், யோகா, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஏறுதல், ஹைகிங், கிரிக்கெட் மற்றும் ஓட்டம் உள்ளிட்ட ஒன்பது விளையாட்டு முறைகளுடன் வருகிறது.
ரியல்மி பேண்ட் மூன்று-அச்சு accelerometer, ரோட்டார் அதிர்வு மோட்டார் மற்றும் இணைப்புக்கு புளூடூத் 4.2-ஐப் பயன்படுத்துகிறது. இது Android 5.0 அல்லது அதற்குப் பிறகு இயங்கும் சாதனங்களுடன் இணக்கமானது. இது 90 எம்ஏஎச் பேட்டரியுடன் பொருத்தப்பட்டிருக்கிறது, இது குறைந்தது ஆறு நாட்களுக்கு நீடிக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.
ரியல்மி பேண்ட் IP68- மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இது உங்கள் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் வழியாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளில் இருந்து அறிவிப்புகளைக் காட்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்