2020-ல் வெளியாகிறது LG-யின் புதிய சவுண்ட்பார்! 

2020-ல் வெளியாகிறது LG-யின் புதிய சவுண்ட்பார்! 

Meridian Audio-வுடன் இந்த soundbar உருவாக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • LG-யின் புதிய சவுண்ட்பார்கள் லாஸ் வேகாஸில் CES 2020-ல் வெளியிடப்படும்
  • புதிய வரம்பு முக்கிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் வருகிறது
  • முதன்மை SN11RG சவுண்ட்பார், 7.1.4-சேனல் ஸ்பீக்கர் அமைப்பாகும்
விளம்பரம்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு LG மிகவும் பிரபலமானது. ஆனால் இது அதிக மதிப்பிடப்பட்ட ஆடியோ தயாரிப்புகளையும் வழங்குகிறது. ஹெட்ஃபோன்கள் மற்றும் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் போன்ற அடிப்படைகளைத் தவிர, LG பல்வேறு ஹோம் தியேட்டர் தயாரிப்புகளான ஸ்பீக்கர் சிஸ்டம்ஸ் மற்றும் சவுண்ட்பார்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்கிறது. தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் கூட்டு நிறுவனம் அதன் புதிய அளவிலான சவுண்ட்பார்ஸை CES 2020-ல் தொடங்க உள்ளது. இது ஜனவரி 7-ஆம் தேதி லாஸ் வேகாஸில் தொடங்குகிறது. மேம்படுத்தப்பட்ட சவுண்ட்பார், நிறுவனத்தின் high-end-ல் 55-inch மற்றும் 65-inch தொலைக்காட்சிகளுடன் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று LG அறிவித்துள்ளது.

SN11RG, SN10YG, SN9YG மற்றும் SN8YG மாடல்கள் உட்பட ஜனவரி மாதம் CES 2020-ல் புதிய வரிசையான சவுண்ட்பார்களையும் அறிமுகப்படுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சவுண்ட்பார்கள் அனைத்தும் பிரீமியம் மாதிரிகள். மேலும், அவை முதன்மையாக LG-யின் high-end தொலைக்காட்சிகளுடன் பயன்படுத்தப்பட வேண்டும். CES-ல் முழு விவரங்கள் வெளியிடப்படும் அதே வேளையில், சவுண்ட்பார்ஸில் பிரீமியம் ஆடியோ தரம், எளிதான இணைப்பு, ஸ்மார்ட் செயல்பாடு மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவை இடம்பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

புதிய சவுண்ட்பார் வரம்பின் வளர்ச்சியில், பிரிட்டிஷ் high-end ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ தயாரிப்புகளை தயாரிக்கும் Meridian Audio-வுடன் இணைந்து LG பணியாற்றியுள்ளது. இது தவிர, புதிய மாடல்களில் பிரீமியம் அம்சங்களான 4K passthrough, Atmos மற்றும் DTS:X sound formats-க்கான ஆதரவு மற்றும் விருப்பமான SPK8 wireless rear speaker kit உடன் பொருந்தக்கூடிய அம்சங்கள் இருக்கும். இந்த flagship SN11RG மாடல் 7.1.4-சேனல் சவுண்ட்பார் அமைப்பாகும். இது ஒலிபெருக்கி (subwoofer) மற்றும் பின்புற ஸ்பீக்கர்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

CES 2020-ல் வெளியீட்டு நிகழ்வில் புதிய சவுண்ட்பார் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும். LG வருடாந்திர தொழில்நுட்ப கண்காட்சியில் ஒரு வலுவான இருப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முழு அளவிலான தயாரிப்புகளையும், 2020-ஆம் ஆண்டில் சில பெரிய புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. இதில் webOS Auto-வும் அடங்கும். இது, Android Auto மற்றும் Apple Car Play ஆகியவற்றின் போட்டியாளராகக் கூறப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG, Soundbars, CES 2020
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »