எல்ஜி கியூ 61 நிறுவனத்தின் கியூ-சீரிஸின் கீழ் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் எல்ஜி கே 61-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இந்த போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் இராணுவ தர வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட LG Q61-ன் விலை KRW 369,600 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,700) ஆகும். இந்த போன் டைட்டானியம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் மே 29 முதல் தென் கொரியாவில் கிடைக்கும்.
LG கியூ 61, 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். போனின் உள்ளே 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
போனின் பின்புறம் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான சென்சார், 8 மெகாபிக்சல் சூப்பர் வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை உள்ளது. செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, போனில் எல்டிஇ, என்எப்சி, புளூடூத் 5, டூயல்-பேண்ட் வைஃபை ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எல்ஜி கியூ 61 MIL-STD 810G மற்றும் DTS: X 3D ஸ்டீரியோ செயல்பாடுகளை ஆதரிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்