எல்ஜியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

LG Stylo 6 விலை 219.99 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,000) ஆகும்.

எல்ஜியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

எல்ஜி ஸ்டைலோ 6 பின்புறத்தில் சாய்வு வடிவமைப்புடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • எல்ஜி ஸ்டைலோ 6 வெளியிடப்பட்டுள்ளது
  • இதில் ஹீலியோ பி 35 ஆதரவு உள்ளது
  • இந்த போன் ஸ்டைலஸ் ஆதரவுடன் வருகிறது
விளம்பரம்

எல்ஜி ஸ்டைலோ 6 இந்த வாரம் சந்தைக்கு வந்தது. பட்ஜெட் பிரிவில் உள்ள இந்த புதிய போனில் ஸ்டைலஸ் ஆதரவு உள்ளது. இந்த போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் கடந்த வாரம் கசிந்தன. புதிய போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி உள்ளது. 


போனின் விலை:

LG Stylo 6 விலை 219.99 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,000) ஆகும். இருப்பினும், இந்த போன் 179.99 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யத் தொடங்கியது. இந்த போனை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து தென் கொரிய நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை.


போனின் விவரங்கள்:

LG ஸ்டைலோ 6 6.8 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். டிஸ்ப்ளேவின் மேல் ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் உள்ளன. போனின் உள்ளே 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எல்ஜி ஸ்டைலோ 6 எடை 219 கிராம் ஆகும்.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • KEY SPECS
  • NEWS
Display 6.80-inch
Processor MediaTek Helio P35 (MT6765)
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2460 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy போன்ல புது Spyware தாக்குதல்! WhatsApp மூலமா வந்த ஆபத்து நீங்க செக் பண்ணீங்களா?
  2. Vivo-ன் அடுத்த பவர்ஃபுல் மாடல்! 7000mAh பேட்டரி 1.5K AMOLED Display! விலை என்ன தெரியுமா?
  3. Apple மாதிரி Action Key-ஆ? Lava Agni 4-ன் மிரட்டல் லீக்ஸ்! ₹30,000-க்கு கம்மி விலையில் இந்தியன் கிங்
  4. Airtel-ல ரீசார்ஜ் விலை ஏறுது! வெறும் வாய்ஸ் மட்டும் வேணுமா? இனி எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கோங்க!
  5. Samsung Galaxy S26, S26+ : Raised Camera Island உடன் வடிவமைப்பு மாற்றம் லீக்
  6. OnePlus Open: OxygenOS 16 அப்டேட் வெளியீடு! AI மற்றும் Performance அப்கிரேடுகள்
  7. ரேஸ் பிரியர்களுக்கான போன்! Aston Martin-உடன் கைகோர்த்து Realme வெளியிட்ட Limited Edition போன்
  8. இனி நெட்வொர்க் இல்லனாலும் போனை யூஸ் பண்ணலாம்! Apple-ன் அடுத்த பாய்ச்சல்! புதிய Satellite அம்சங்கள்
  9. Samsung ரசிகர்களுக்கு ஒரு ஹாட் நியூஸ்! Galaxy S26 சீரிஸ் திட்டமிட்டபடி வருது! ஆனா விலையும் ஏறுது
  10. Oppo-வின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்! Find X9 சீரிஸ்-ஓட கலர் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் வெளியானது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »