ஷாவ்மி ஆதரவு ஹுவாமி தனது அமாஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்சை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
அமாஸ்ஃபிட் டி-ரெக்ஸ் 5ATM நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது
Amazfit T-Rex ஜூன் இரண்டாவது வாரத்தில் இந்தியாவுக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 20 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று ஹுவாமி கூறியது. இராணுவ சான்றிதழ், AMOLED டிஸ்ப்ளே உள்ளது. Amazfit Bip S ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
Amazfit T-Rex மொத்தம் ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். சீனாவில் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,400) ஆகும். இருப்பினும், புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அதிக விலைக்கு அறிமுகப்படுத்தப்படலாம்.
Amazfit T-Rex, 1.3 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பிபிஜி இதய துடிப்பு சென்சார், மூன்று அச்சு முடுக்கமானி, புவி காந்த சென்சார் மற்றும் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளது. இணைப்பிற்காக, Amazfit T-Rex புளூடூத் வி 5.0-ஐப் பயன்படுத்துகிறது, மேலும் ஜிபிஎஸ் + க்ளோனாஸையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சில் 370 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
Amazfit T-Rex, ஒரே சார்ஜில் 20 நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. ஸ்மார்ட்வாட்ச் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். இதில் ஏடிஎம் நீர் எதிர்ப்பு உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்சின் எடை 58 கிராம் ஆகும்.
Amazfit T-Rex, 14 விளையாட்டு முறை கண்காணிப்பைக் கொண்டுள்ளது. 24 மணி நேர இதய துடிப்பு சென்சார் உள்ளது. ஸ்மார்ட்போனின் அனைத்து அறிவிப்புகளையும் இந்த ஸ்மார்ட்வாட்சில் காணலாம்.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped